தேவையானவை:
பனை நுங்கு – 8
பால் – 400 மில்லி
சர்க்கரை – 200 மில்லி
ரோஜா எசன்ஸ் – சிறிதளவு
செய்முறை:
பாலை, அதே அளவு தண்ணீர் சேர்த்து நன்கு காய்ச்சி ஆற வைக்கவும்.
பால் ஆறியவுடன், அதில் சிறிதளவு ரோஜா எசன்சையும் சர்க்கரையையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பனை நுங்கை தோல் நோக்கி, வழவழப்பான உள்பகுதியை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.
இதை மிக்சியில் போட்டு நன்றாக அடித்து பிறகு பாலுடன் சேர்க்கவும்.
பிறகு இந்தக் கலவையை பிரிட்ஜில் ஒரு நிமிடங்கள் வைக்கவும்.
சுவையான ஜில் ஜில் “நுங்கு பானம்” தயார்.
கோடைக்கு ஏற்ற சிறந்த வகை பானம் இது. இதை செய்வதும் எளிதே. உடல் வெப்பத்தை தணித்து உடம்புக்கு குளிர்ச்சி அளிக்கும்.