29.5 C
Chennai
Sunday, Nov 24, 2024
cashew chicken 1643796460
சமையல் குறிப்புகள்

முந்திரி சிக்கன்

தேவையான பொருட்கள்:

* எலும்பில்லாத சிக்கன் – 500 கிராம் (சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்

* சோள மாவு – 1/2 கப்

* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

சாஸ் செய்வதற்கு…

* எண்ணெய் – 2 டீஸ்பூன்

* முந்திரி – 1/4 கப்

* வரமிளகாய் – 3

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

* குடைமிளகாய் – 1 (நறுக்கியது)

* சோயா சாஸ் – 1 டீஸ்பூன்

* வினிகர் – 1 டீஸ்பூன்

* தண்ணீர் – 3-4 கப்

* சர்க்கரை – 2 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

* மிளகுத் தூள் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மிளகுத் தூள், சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு நன்கு பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் வரமிளகாயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அவற்றை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு அதே வாணலியில் உள்ள எண்ணெயில், வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.

* பின் அதில் சோயா சாஸ், வினிகரி, உப்பு, சர்க்கரை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு கிளறி விட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

* அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, அதோடு முந்திரி மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்கு நீர் சுண்டும் வரை கிளறி, இறுதியாக மிளகுத் தூளைத் தூவி கிளறி இறக்கினால், மொறுமொறுப்பான முந்திரி சிக்கன் தயார்.

Related posts

சுவையான முகலாய் முட்டை கிரேவி

nathan

உங்கள் சமயலைறையில் சத்துக்கள் வீணாகமல் சமைப்பது எப்படி…

nathan

எளிய முறையில் வடகறி ரெசிபி

nathan

செட்டிநாடு பட்டாணி குருமா

nathan

ஆரோக்கியமான ராகி தோசை

nathan

பச்சை பயறு கிரேவி

nathan

சுவையான சௌ செள கூட்டு

nathan

சுவையான கீரை சாம்பார்

nathan

சுவையான தக்காளி தொக்கு

nathan