தேவையானவை:
கடலைப்பருப்பு – ஒரு கப்,
துவரம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – ஒரு கப்,
பொடியாக நறுக்கிய புதினா – மல்லித்தழை – கால் கப்,
எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு. அரைத்துக் கொள்ள:
பூண்டு – 4 பல்,
சோம்பு – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2, பட்டை,
லவங்கம்,
ஏலக்காய் – தலா 1.
செய்முறை:
கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் ஊறிய கடலைப்பருப்பை தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள கடலைப்பருப்புடன் துவரம்பருப்பை சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைக்க கொடுத்த பொருட்களை ஓன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். எண்ணெய் நீங்கலாக எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும், மிதமான தீயில் மெல்லிய வடைகளாக தட்டிப் போட்டு, இருபுறமும் திருப்பி நன்கு வேக விட்டு எடுக்கவும்.