என்னென்ன தேவை?
வெள்ளை சோளம் – 1 கப்,
தண்ணீர் – 4 கப்,
தட்ட கொட்டை (காராமணி பயறு) – 1/4 கப்,
சாம்பார் வெங்காயம் – 1/4 கப் (பொடியாக அரிந்தது),
பச்சை மிளகாய் – 3,
உப்பு – தேவைக்கு,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
கொத்தமல்லித்தழை – சிறிது,
தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்,
கருவடகம் – 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
தோல் நீக்கிய வெள்ளை சோளம், தட்டைப்பயறு இரண்டையும் தனித்தனியாக 1 கப்பிற்கு 4 கப் தண்ணீர் விட்டு 7-8 விசில் வரும் வரை நன்றாக வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடிகட்டி கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கருவடகம் போட்டு சிவந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கி அதில் சோளம், தட்டைப்பயறு, உப்பு போட்டு கலந்து, தேங்காய்த்துருவல், கொத்தமல்லி தூவி கலந்து இறக்கவும்.
குறிப்பு: விருப்பப்பட்டால் ஜீரணத்துக்கும், மணத்துக்கும் இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்க்கலாம்.