goodluck 1654513745
ஆரோக்கியம் குறிப்புகள்

இந்த பொருட்களை வீட்டில் வெச்சிருந்தா உங்க அதிர்ஷ்டம் பிரகாசிக்குமாம்…

நாம் அனைவரும் மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை வாழ விரும்புகிறோம். வீட்டில் மகிழ்ச்சி இல்லாவிட்டால் அந்த வீட்டில் வாஸ்து தோஷம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சில பொருட்களை கொண்டு உங்கள் தூக்க அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கிக் கொள்ளலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டில் சில பொருட்களை வைத்திருப்பது உங்கள் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அதிகரிக்கும். குறிப்பாக களிமண் பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், அது உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை சேர்க்கும். சில பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. அதுமட்டுமல்லாமல், களிமண் பொருட்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கின்றன.எனவே, மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கை வாழ ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் களிமண் பொருட்களை வைத்திருக்க வேண்டும்.அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

மண் பானை
மண் பானையில் நீரை ஊற்றி வைத்து குடித்தால் குடிக்கும் நீர் மட்டுமின்றி உடலும் குளிர்ச்சியாக இருக்கும். வாஸ்துப்படி ஒரு வீட்டில் மண் பானை இருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மண் பானையானது வீட்டில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. அதுவும் வீட்டின் வடக்கு திசையில் மண் பானையை வைத்திருக்க வேண்டும். முக்கியமாக அதில் எப்போதும் தண்ணீர் இருக்க வேண்டும். காலி மண் பானையை வைத்திருந்தால், அது அதிர்ஷ்டத்தை தராது.

களிமண் சிலைகள்

வீட்டின் வடகிழக்கு மற்றும் தென் மேற்கு திசையில் களிமண் சிலைகளை வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் இச்செயலால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும் என்பது ஐதீகம். முக்கியமாக இப்படி செய்வதால் நிதி நெருக்கடியில் இருந்து விடுபடலாம்.

மண் குவளை

வீட்டின் வடக்கு திசையில் ஒரு மண் குவளையில் தண்ணீரை எப்போதும் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக இச்செயலால் தெய்வங்களின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

மண் விளக்குகள்

வாஸ்து சாஸ்திரத்தின் படி, தெய்வ வழிபாடுகளின் போது மண் விளக்குகளைப் பயன்படுத்துவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் தங்கி, சந்தோஷம் பெருகி, அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.

மண் பாத்திரங்கள்

வீட்டில் மண் பாத்திரங்களை வைத்திருப்பது மிகவும் மங்களகளரமானதாக கருதப்படுகிறது. வாஸ்துப்படி, இந்த பொருட்களைப் பயன்படுத்துவது வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் மண் பாத்திரங்களைப் பயன்படுத்துவதால் வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலை சீராக இருக்கும்.

Related posts

பெண்களுக்கு ஏன் சிறிய மார்பகங்கள் தான் சிறந்தது என்பதற்கான காரணங்கள்!!!

nathan

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க..

nathan

பெண்களுக்கு கணக்கற்ற நன்மைகளை அளிக்கும் ‘கடலை எண்ணெய்’

nathan

மலட்டுத்தன்மை நீக்கி குழந்தை பாக்கியம் கிடைக்க செய்யும் வாழைப்பூ -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

அழுவதனால் பல நன்மைகள் இருக்கின்றன தெரியுமா?

sangika

அதிகம் சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்து

nathan

இரவில் பால் குடிக்கலாமா..?

nathan

தெரிஞ்சிக்கங்க…சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் பழம்..!

nathan

தெரிஞ்சிக்கங்க…நல்லெண்ணெய் குளியல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

nathan