நாம் நல்லதை மொத்தமாய் ஒதுக்கிவிட்டு, தீயதை மட்டுமே சேர்த்துக் கொள்ளும் கலிகாலத்தில் வாழ்ந்து வருகிறோம். ஏதோ சம்பிரதாயத்திற்காக உணவில் வெங்காயத்தை சேர்த்துவிட்டு, சாப்பிடும் போது ஏதோ தீண்ட தகாததைப் போல ஒதுக்கிவிடுவோம்.
ஆனால், நூடுலேஸ் போன்றவற்றை ஒரு துளி கூட விட்டுவைக்காமல் உறுஞ்சி உண்ணுவோம். வெங்காயம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வல்லமைக் கொண்டது. நோய் பரப்பும் கிருமிகளை உடலில் அண்டவிடாது.
அதனால் தான் நமது முன்னோர்கள் வெங்காயத்தை அனைத்து உணவிலும் சேர்த்து வந்தனர். ஏன், நீராகாரமான பழைய சோறுக்குக் கூட அதைக் கடித்துக்கொள்ள பயன்படுத்தினர்.
ஆனால் மிளகு, வெங்காயம் போன்ற சத்து வாய்ந்த உணவுகளை சாப்பாட்டில் ஒதுக்குவதே நமது பண்பாடாகிவிட்டது. இனி, உடல் சூட்டை தணிக்கும் வெங்காயத்தின் அற்புதமான நலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
சிறுநீரை வெள்ளையாக்கும்
வெங்காயத்தை பச்சையாக வாயில் மென்று சாப்பிட்டு வந்தால், சிறுநீரை நன்கு வெள்ளையாக்கும்.
உடல் சூட்டை தணிக்கும் உடல் சூட்டால் அவதிப்படுபவர்கள், வெங்காயத்தை நெய்விட்டு நன்கு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் சூடுக் குறையும்.
மயக்கம் தெளியும்
மயக்க உற்றிருப்பவர்களின் மூக்கில் வெங்காயச் சாற்றைப் பிழிந்துவிட்டால் மயக்கம் தெளியும்.
காது பிரச்சனைகள்
காது வலி, காதிரைச்சல், போன்ற நோய்களுக்கு வெங்காயச்சாற்றை ஓரிருத் துளிகள் காதில் விட்டால், சீக்கிரம் அந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வுக் காணலாம்.
மூலச்சூடு
பசு பாலால் எடுக்கப்பட்ட நெய்யில், வெங்காயத்தை வதக்கி சீரகமும், கற்கண்டும் தேவையான அளவு சேர்த்து, சாப்பிட்டு வந்தால் மூலச்சூடு தணியும்.
இதய நோய்கள்
வெங்காயத்தை உணவில் தினமும் சேர்த்து வந்தால், இதய நோய்களை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். பல வகையான தோல் நோய்களுக்கும் நல்ல மருந்தாக வெங்காயம் பயன்படுகிறது.
இரத்த சோகை
வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால், இரத்த சோகை பிரச்சனையில் இருந்து நல்ல தீர்வுக் காணலாம்.
வாந்தி பேதி நிற்கும்
முப்பது கிராம் வெங்காயத்துடன் ஏழு மிளகும் சேர்த்து நன்கு அரைத்து உண்டு வர வாந்தி, பேதி நிற்கும். சிறிது சர்க்கரையும் சேர்த்துக்கொள்ளலாம்.
பல் பிரச்சனைகள்
பல் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள், தினமும் பச்சை வெங்காயத்தை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் பல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வுக் காணலாம்.
வெங்காயத்தின் சத்துகள்
நூறு கிராம் வெங்காயத்தில், ஈரப்பதம் – 86.6% ; புரதம் – 1.2% ; கொழுப்புச்சத்து – 0.1% ; நார்ச்சத்து – 0.6% ; தாதுச்சத்து – 0.4% ; மாவு சத்து (கார்போஹைட்ரேட்டுகள்) – 11.7% போன்ற சத்துகள் அடங்கியிருக்கின்றன.
குளிர் காய்ச்சல்
குளிர் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர்கள், வெங்காயத்துடன் மூன்று மிளகு சேர்த்து சாப்பிட்டு வந்தால், காய்ச்சல் குறையும்.