dwacfsacfseacf
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு சுளுக்கு பிடிச்சிருச்சா? சில டிப்ஸ் இதோ..

பொதுவாக நாம் கை, காலை எங்காவது தேவையில்லாமல் அசைக்கும்போது, திரும்பிப் படுக்கும்போது, காயங்கள் ஏற்படும் போது சுளுக்கு ஏற்படுவது இயல்பானது.

குறிப்பாக ஓடி, சுறுசுறுப்பாக உடல் ரீதியாக வேலை எதுவும் செய்யாமல் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்களுக்கு அதிகமாக சுளுக்கு ஏற்படும்.

இதனை எளியமுறையில் கூட சரி செய்யலாம். தற்போது அவை எப்படி என்பதை பார்ப்போம்.

சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்து வந்தால் கொஞ்சம் கொஞ்சமாக தசைப்பிடிப்பு நீங்கும்.

சுளுக்கு ஏற்பட்ட இடத்தில் சிறிது கிராம்பு எண்ணெயைத் தடவி, மசாஜ் செய்து வந்தால் சுளுக்குப் பிடித்த இடத்திலுள்ள வலி குறையும். ஒரு நாளைக்குத் தொடர்ந்து மூன்று அல்லது நான்கு முறை கிராம்பு எண்ணெயைப் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வர, சுளுக்கு விரைவில் சரியாகும்.

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, அதை ஒரு சுத்தமான துணியில் வைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் நன்கு இறுக்கமாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அந்த வெங்காயத்தின் சாறு பாதிக்கப்பட்ட இடத்தில் படுமாறு வைத்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்யலாம். ஒரு முறை செய்யும்போது 3 மணி நேரம் வரை பாதிக்கப்பட்ட இடத்தில் கட்டி வைத்திருக்கலாம்.

ஆலிவ் ஆயிலில் ஆன்டி- இக்ப்ளமேட்டரி பண்புகள் அதிக அளவில் இருக்கின்றன. இது உடலில் ஏற்படும் வீக்கம் போன்ற பிரச்சினைகளைக் குறைக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் ஆலிவ் எண்ணெயை மிதமான சூட்டில் தேய்த்து நன்கு மசாஜ் செய்தால் வலி உடனடியாகக் குறையும்.

சூடான நீரில் 3 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரைக் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்து வந்தால் வலியும் வீக்கமும் குறையும். சுளுக்கு சரியாகும் வரை ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை வரை இதை செய்யலாம்.
விளக்கெண்ணெயை சுத்தமான துணியில் நனைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் வைத்துக் கட்டிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு அந்த பகுதியைத் துடைத்து விடுங்கள். இதை தினமும் 2 முறை செய்தாலே தசை வீக்கம் குறையும் சுளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும்.

கடல் உப்பு தசை வலி மற்றும் தசை வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

Related posts

தெரிஞ்சிக்கங்க…அடிக்கடி டர்ர்ர்ர்ர்… கட்டுப்படுத்த சில யோசனைகள்!

nathan

உங்கள் பாதங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும் “பியூமிஸ் ஸ்டோன்”…

nathan

ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்கலாம் தெரியுமா? கட்டாயம் இதை படியுங்கள்…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…குழந்தைகளின் கோபத்தைக் கையாள 5 எளிய வழிகள்!!!

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. தினமும் ஒரு டம்ளர் ஓமம் நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.!

nathan

தேவையற்ற கொழுப்பை கரைத்து, உடலை ஃபிட்டாக்க உடற்பயிற்சி!…

nathan

உங்க குழந்தை மிட் நைட்’ல அடிக்கடி அழுகுதா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

மன அழுத்தத்தை போக்கும் பூக்கள்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை தாங்கலையா? இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan