ஆரோக்கிய உணவு

ஓட்ஸ் டயட் இட்லி : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள் :

சம்பா கோதுமை ரவை – ஒரு கப்
ஓட்ஸ் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
புளித்த தயிர் – ஒரு தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு – அரை தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை தேக்கரண்டி
கடலை பருப்பு – அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய இஞ்சி – அரை தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – அரை தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
தாளிக்க :
எண்ணெய் – 2 தேக்கரண்டி
முந்திரி – தேவையான அளவு

செய்முறை :
மேலே குறிப்பிட்டுள்ள தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும்.

ஓட்ஸை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்துக் கொள்ளவும்.

பொடித்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு கப் கோதுமை ரவை, புளித்த தயிர் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு, சிறிது தண்ணீரும் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

கரைத்த மாவுடன் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளித்து சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு இட்லி தட்டில் ஊற்றி முந்திரியை வைத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

சுவையான ஓட்ஸ் டயட் இட்லி தயார். இதை தேங்காய் மற்றும் கொத்தமல்லி சட்னியுடன் சூடாக சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

 

Related posts

சுவையான மாதுளை மில்க்ஷேக்

nathan

உங்களுக்கு தெரியுமா வாரத்தில் ஒரு நாள் இந்த மீனை சாப்பிட்டால், நோய்கள் எல்லாம் 10 அடி தள்ளியே நிற்கும்!

nathan

antioxidant benefits in tamil – ஆன்டி-ஆக்ஸிடெண்ட்

nathan

நீங்கள் ஜவ்வரிசி சாப்பிடுபவர்களா?அப்ப இத படிங்க!

nathan

லிச்சி பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!

nathan

சூப்பரான நாட்டு காய்கறி கூட்டு

nathan

துரித உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம்

nathan

ஆரோக்கியமான, சத்தான கீரை உப்புமா

nathan

மணத்தக்காளிக்கீரைத் துவையல்

nathan