31.4 C
Chennai
Saturday, Jun 1, 2024
Ragi semiya upma 500x375 1
சமையல் குறிப்புகள்

சுவையான சேமியா உப்புமா

உங்களுக்கு சேமியா உப்புமாவை மிகவும் சுவையாகவும், சிம்பிளாகவும் செய்யத் தெரியுமா? இல்லாவிட்டால், தமிழ் போல்ட் ஸ்கை சேமியா உப்புமாவை எப்படி சிம்பிளாக செய்வதென்று கொடுத்துள்ளது. மேலும் இந்த சேமியா உப்புமாவை சர்க்கரை அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

சரி, இப்போது அந்த சிம்பிளான சேமியா உப்புமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Simple Semiya Upma Recipe
தேவையான பொருட்கள்:

சேமியா – 1 பாக்கெட்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
நெய் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு…

எண்ணெய் – 3-4 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியாவைப் போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் கொட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

அடுத்து அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு தூவி, தண்ணீரை கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் அதில் வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து, வேக வைக்க வேண்டும். தண்ணீரானது வற்றி, சேமியா மென்மையாக வெந்த பின், அதனை இறக்கி பரிமாறினால், சேமியா உப்புமா ரெடி!!!

Related posts

புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு

nathan

சூப்பரான கார்ன் இட்லி

nathan

இறால் கிரேவி

nathan

coconut milk benefits in tamil – தேங்காய் பால் நன்மைகள்

nathan

மாலை வேளையில் முட்டை கொத்து பாஸ்தா

nathan

பட்டாணி கிரேவி

nathan

சுவையான ரெடி மினி சமோசா வீட்டிலேயே செய்யலாம்…

sangika

உருளைக்கிழங்கு ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா?

nathan

சுவையான மல்லிகைப் பூ போல இட்லி வேண்டுமா?

nathan