28.2 C
Chennai
Sunday, Sep 29, 2024
coconut milk curry
ஆரோக்கிய உணவு

சுவையான தேங்காய் பால் குழம்பு

இதுவரை எத்தனையோ குழம்பு செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் தேங்காய் பால் கொண்டு குழம்பு செய்து சுவைத்ததுண்டா? ஆம், தேங்காய் பால் கொண்டு செய்யப்படும் குழம்பு மிகவும் சுவையாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும். மேலும் இதில் காய்கறிகள் சேர்த்து செய்வதால், இது ஆரோக்கியமானதும் கூட.

சரி, இப்போது அந்த தேங்காய் பால் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Coconut Milk Kulambu
தேவையான பொருட்கள்:

தேங்காய் – 1
உருளைக்கிழங்கு – 4 (நறுக்கியது)
கத்திரிக்காய் – 4 (நறுக்கியது)
முருங்கைக்காய் – 1 (நறுக்கியது)
எலுமிச்சை – 1/2
பூண்டு – 1
மிளகாய் – 4
மல்லி – 2 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் மிக்ஸியில் மிளகாய், மல்லி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர் தேங்காயை துருவி, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, தனியாக ஒரு பாத்திரத்தில் இரண்டாவது பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து அந்த இரண்டாவது பாலில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதில் காய்கறிகளை சேர்த்து, உப்பு சிறிது தூவி, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.

காய்கறிகளானது வெந்ததும், அதில் முதல் தேங்காய் பாலை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

பிறகு மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் குழம்பில் கொட்ட வேண்டும்.

இறுதியில் அதில் எலுமிச்சையை பிழிந்து இறக்கினால், தேங்காய் பால் குழம்பு ரெடி!!!

Related posts

அப்பிள் பழத்தை விட….. சிறந்தது வாழைப்பழம்……..!

nathan

உங்க கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் இயற்கை உணவுகள் !

nathan

தெரிஞ்சிக்கங்க…காலையில் வெறும் வயிற்றில் தேன் சாப்பிடலாமா?

nathan

வயதுகளுக்கான உணவுப்பழக்கம் மிக அவசியம் …….

sangika

இந்த இரண்டு பழங்களை மட்டும் சேர்த்து சாப்பிடா மரணம் நிச்சயம்!

nathan

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!தெரிஞ்சிக்கங்க…

nathan

சூப்பரான கீமா டிக்கி

nathan

தெரிஞ்சிக்கங்க…அல்சர் இருப்பவர்கள் விரைவில் குணமாக சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு தவறாமல் கொடுக்க வேண்டிய உணவுகள்!!!

nathan