91 chicken gravy
ஆரோக்கிய உணவு

சூப்பரான சைனீஸ் ஸ்டைல் கார்லிக் சிக்கன்

பலருக்கு கடைகளில் விற்கப்படும் சிக்கன் மீது அலாதி பிரியம் இருக்கும். அதிலும் சைனீஸ் ஸ்டைல் ரெசிபிக்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அந்த சைனீஸ் ஸ்டைல் ரெசிபிக்களில் கார்லிக் சிக்கனை பலரும் விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு கார்லிக் சிக்கன் ரொம்ப பிடிக்குமா? அதை வீட்டிலேயே செய்து சாப்பிட ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

இங்கு சைனீஸ் ஸ்டைல் கார்லிக் சிக்கன் ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

Chinese Style Garlic Chicken Recipe
தேவையான பொருட்கள்:

சிக்கனுக்கு…

எலும்பில்லாத சிக்கன் – 1/2 கிலோ
மைதா – 4 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 4 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

கிரேவிக்கு…

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 3
இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 10 பற்கள் (அரைத்துக் கொள்ளவும்)
தக்காளி கெட்சப் – 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 1/2 டீஸ்பூன்
சில்லி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
வினிகர் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்
சோள மாவு – 1 டீஸ்பூன்
வெங்காயத் தாள் – 1 கையளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி, அதனை ஒரு பௌலில் போட்டு, எண்ணெயைத் தவிர, சிக்கனுக்கு கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்துப் பொருட்களையும் போட்டு நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் சேர்த்து சூடானதும், அதில் வர மிளகாய் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி, பூண்டு சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் வெங்காயம், அரைத்த பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் அனைத்து சாஸ்களையும் சேர்த்து நன்கு கிளறி, பின் உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின் அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, குறைவான தீயில் 3-4 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின்னர் சோள மாவை சிறிது நீரில் கலந்து, பின் கிரேவியுடன் சேர்த்து, அத்துடன் மிளகுத் தூள் மற்றும் வெங்காயத் தாள் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சைனீஸ் ஸ்டைல் கார்லிக் சிக்கன் ரெடி!!!

Related posts

இந்த 10 அற்புதமான ஜூஸ்களை கொண்டு எப்படி உடல் எடையை குறைக்கலாம் தெரியுமா?

nathan

மறந்து போன மருத்துவ உணவுகள்

nathan

சூப்பரான டிப்ஸ்! இந்த விஷயம் தெரிஞ்ச இனி பாகற்காயை வெறுக்கவே மாட்டீங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பாலில் தேன் கலந்து குடிப்பது உண்மையில் ஆரோக்கியமானதா?

nathan

உடல்நலன் காக்கும் உணவுமுறை!

nathan

ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும் உருளைக்கிழங்கு

nathan

சூப்பர் டிப்ஸ்! குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடால் போதும்!

nathan

சாப்பாட்டை வெறுக்கும் குழந்தைகளுக்கு அற்புதமான எளிய தீர்வு

nathan

சுவையான சத்தான கம்பு லஸ்ஸி

nathan