28.1 C
Chennai
Saturday, Nov 16, 2024
pomegranates fruit
ஆரோக்கிய உணவு

தெரிஞ்சிக்கங்க…மாதுளம் பழமும், அதன் மருத்துவ பயன்களும்.!

மாதுளம் பழம் சுவையில், இனிப்பாகவும் அதே சமயம் நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் பயன்படுகிறது.

மாதுளை என்பது அனைவராலும் விரும்பி உண்ணப்படும் கனியாக இருக்கிறது. இந்த மாதுளம் பழம் சுவையில், இனிப்பாகவும் அதே சமயம் நமது உடலுக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் அடங்கிய மருந்தாகவும் பயன்படுகிறது.

மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று வகை சுவைகள் உள்ளன. இதில் இனிப்பு, புளிப்பு இரண்டு வகை மாதுளையும் சக்தியளிக்கும். மாதுளையின் பழம், பூ, பட்டை, ஆகியவை அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாகவும், அதிக அளவிலும் அழித்து விடுகிறது. அதனால் நோய் நீங்கி ஆரோக்கியமும் சக்தியும் அளிப்பதில் மாதுளை சிறந்த பலனைத் தருகிறது. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது. இருமலை நிறுத்துகிறது.

மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சினை நீங்கும். நினைவாற்றல் பெருகும். இது மட்டுமல்ல.. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இதய நோய்கள், இதய பலவீனம் நிவர்த்தியாகும். ரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கிறது. நோயின் பாதிப்பால் பலவீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் நலம் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பகங்கள், நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது.- source: maalaimalar

Related posts

கால்சியம் அளவு சீராக சாக்லேட் பவுடர் சாப்பிட்டாலமா?

nathan

சூப்பரான ஐயங்கார் ஸ்டைல் வெந்தய குழம்பு

nathan

7 நாட்களில் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரிய சூப்பர் டிப்ஸ்!

nathan

வெண்டைக்காய் பற்றி தெரியுமா..?அப்ப இத படிங்க!

nathan

கர்ப்பகாலத்தில் தாய்மார்கள் உண்ணும் உணவுகள் தொடர்பில் தெரிஞ்சிக்கங்க…

nathan

சுவையான சத்தான ராகி கருப்பட்டி பணியாரம்

nathan

சர்க்கரை நோயாளிகள் பயமின்றி சாப்பிடக்கூடிய பழங்கள் !!

nathan

புற்றுநோயை அழிக்கும் 30 உணவுகள்!

nathan

பெண்களே மசாலா மீன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்கள்…

nathan