21 61cb82df2
ஆரோக்கியம் குறிப்புகள்

நீரிழிவு நோயாளிகள் அச்சமின்றி சாப்பிடும் கேழ்வரகு அவல்….தெரிஞ்சிக்கங்க…

கேழ்வரகு அவலை வைத்து சத்தான சுவையான உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இது நீரிழிவு நோயாளிகளுக்கு அருமையான உணவு.

தேவையான பொருட்கள்
கேழ்வரகு அவல் – ஒரு கப்
வெங்காயம் – ஒன்று
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயத்தூள் – சிறிதளவு
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை
கேழ்வரகு அவலை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடம் ஊற வைக்கவும்.

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். கடாயில் எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து, வதங்கவும்.

வதங்கியதும் கேழ்வரகு அவலை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி 10 நிமிடம் மூடி வைக்கவும்.

அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும். பிறகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும். சத்தான கேழ்வரகு அவல் உப்புமா ரெடி.

Related posts

படர்தாமரை முற்றிலும் குணமாக

nathan

சுவையான கம்பு அல்வா…

nathan

ஆண்களை விட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம்!…

sangika

மஞ்சள் பற்களை விரைவில் வெண்மையாக்க 5 ட்ரிக்ஸ்!!

nathan

மாவு பிசைகிறவர்களுக்கு சில பயனுள்ள குறிப்புகள்.

nathan

பற்களின் மீது உள்ள மஞ்சள் கறைகள் நீங்க

nathan

நீங்கள் உணவில் உப்பை அதிகம் சேர்க்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!!!

nathan

கோடைகாலத்துல சர்க்கரை நோயாளிகள் இதெல்லாம் செய்யவே கூடாதாம்…

nathan

உங்கள் குழந்தை சீக்கிரமா நடக்கணும்னா, என்ன செய்வது என்று உங்களுக்குத் தெரியுமா?

nathan