29.7 C
Chennai
Saturday, Jul 11, 2026
ஐஸ்க்ரீம் வகைகள்

வாழைப்பழ ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை?

பால் – 1/3 கோப்பை
முட்டை – 2
கிரீம் – 1 கோப்பை
சர்க்கரை – 1/2 கோப்பை
பழுத்த வாழைப்பழங்கள் – 1 கோப்பை மசித்தது
வெண்ணிலா எஸ்ஸென்ஸ் – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு- 2 தேக்கரண்டி
உப்பு – 1/4 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

முதலில் மஞ்சள் கரு மற்றும் வெள்ளைக்கருவை பிரித்துக்கொள்ளவும். சூடான தண்ணீரின் மீது ஒரு பாத்திரத்தை வைத்து அதில் முட்டை மஞ்சள்கரு, சர்க்கரை இரண்டையும் சேர்த்து சற்றே கெட்டியாக மஞ்சள் நிறமாகும் வரை அடிக்கவும். அதில் பால், உப்பு, வாழைப்பழ மசியல், எலுமிச்சை சாறு சேர்க்கவும். இதனை குளிர்ப்படுத்தவும். இதில் முட்டை வெள்ளைக்கரு, வெண்ணிலா எஸ்ஸென்ஸ், மற்றும் கிரீம் சேர்த்து கலக்கவும். இதனை ஐஸ்கிரீம் கோப்பைகளில் ஊற்றி குளிர்பதனப்பெட்டியின் உறையும் அறைகளில் வைத்து அடுத்த நாள் எடுத்து உண்ணலாம்.

Related posts

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் குல்ஃபி

nathan

அன்னாசிப்பழ புட்டிங்

nathan

சோயா – ஸ்ட்ராபெரி ஐஸ்க்ரீம்

nathan

ஆரஞ்சு – ஸ்ட்ராபெர்ரி பாப்சிகிள்

nathan

சோயா ஐஸ்கிரீம்

nathan

அன்னாசி – புதினா ஜூஸ்

nathan

டிராகன் ஃப்ரூட் ஜூஸ் செய்முறை விளக்கம்

nathan

சாக்லேட் ஐஸ்க்ரீம்

nathan

அரிசி பாயாசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்…!

nathan