broccoli toast
ஆரோக்கிய உணவு

ப்ராக்கோலி ரோஸ்ட்

மாலையில் டீ/காபி குடிக்கும் போது பஜ்ஜி, போண்டா போன்றவற்றை தான் செய்து சாப்பிட வேண்டும் என்றில்லை. பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட ப்ராக்கோலியை ரோஸ்ட் செய்து சாப்பிடலாம். அதிலும் உங்கள் வீட்டில் மைக்ரோ ஓவன் தூங்கிக் கொண்டிருந்தால், ப்ராக்கோலி ரோஸ்ட் செய்து சாப்பிடுவது சிறந்தது.

சரி, இப்போது ப்ராக்கோலி ரோஸ்ட்டை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Roasted Broccoli Recipe
தேவையான பொருட்கள்:

ப்ராக்கோலி – 2 கப்
ஆலிவ் ஆயில் – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 4 பற்கள் (பேஸ்ட் செய்தது)
எலுமிச்சை தோல் பொடி – 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்
சீஸ் – 1 டேபிள் ஸ்பூன்
எள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் கொதிக்கும் நீரில் ப்ராக்கோலியைப் போட்டு 3 நிமிடம் ஊற வைத்து பின் நீரை வடித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பௌலில் ப்ராக்கோலியைப் போட்டு, அத்துடன் எள் தவிர அனைத்தையும் சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு மைக்ரோ ஓவனை 215 டிகிரி c-யில் 10 நிமிடம் சூடேற்ற வேண்டும்.

பின் பேக்கிங் ட்ரேயில் பிரட்டி வைத்துள்ள ப்ராக்கோலியை வைத்து, அதன் மேல் எள்ளை தூவி விட்டு, மைக்ரோ ஓவனில் வைத்து 15-20 நிமிடம் டோஸ்ட் நிலையில் வைக்க வேண்டும். பின் க்ரில் நிலையில் மாற்றி 2 நிமிடம் வைத்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான ப்ராக்கோலி ரோஸ்ட் ரெடி!!!

Related posts

தெரிஞ்சிக்கங்க…ஒரு நாளைக்கு எத்தனை கப் காபி குடிப்பது ஆரோக்கியமானது?

nathan

சத்து மாவு உருண்டை

nathan

கசப்பே இனிப்பு! வேப்பம்பூ ரெசிப்பி!

nathan

ஒரே நாளில் மூட்டுவலியை விரட்டியடிக்கும் இயற்கை பானம்! சூப்பர் டிப்ஸ்

nathan

ஹோம் மேட் மயோனைஸ்

nathan

மங்குஸ்தான் பழத்தின் மகத்துவங்கள்

nathan

மாதுளையின்ஆரோக்கிய நன்மைகள்! இதை சாப்பிடாமல் இருக்கக்கூடாது!

nathan

ஓட்ஸை எப்படி உப்புமா போன்று செய்து சாப்பிடுவது?

nathan

kudampuli benefits in tamil – குடம்புளி (Garcinia Cambogia

nathan