31.1 C
Chennai
Friday, Aug 28, 2026
ஆரோக்கிய உணவு

இலங்கை ஆப்பம் செய்யணுமா?

இலங்கையில் ஸ்டைலில் ஆப்பம் தயார்செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

ஆப்பம் செய்ய தேவையான பொருட்கள்
இட்லி அரிசி – 1 கப்
பச்சரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
தேங்காய் – 1/2 மூடி
வெந்தயம் – 2 ஸ்பூன்
சமைத்த சாதம் – 1/4 கப்
உப்பு – தேவையான அளவு

ஆப்பம் செய்முறை
முதலில் இட்லி அரிசி மற்றும் பச்சரிசியினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 மணிநேரம் ஊறவைக்கவும் . அதேபோன்று உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றினை ஒரு பாத்திரத்தில் 2 மணி நேரம் ஊறவைக்கவும்.
பிறகு ஊறவைத்த உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தினை கிரைண்டரில் போட்டு அரைக்கவும். அது நன்றாக அரைத்த உடன் அதனுடன் ஊறவைத்த அரிசியினையும் கொட்டி அரைக்கவும்.
பிறகு அதனுடன் தேங்காய் மற்றும் சமைத்த சாதம் போன்றவைகளையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். இப்போது அரைத்த மாவினை ஒரு கின்னத்தில் ஊற்றி 8 மணிநேரம் அதை புளிக்க வைக்கவேண்டும்.
எட்டு மணிநேரம் கழித்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தற்போது ஆப்பம் செய்ய தேவையான மாவு தயாராகிவிட்டது.
இதனை ஆப்பகாடாயில் ஊற்றி மெலிதாக எண்ணெய் ஊற்றி ஒரு பக்கம் வேகவைத்து எடுத்தால் சுவையான ஆப்பம் தயார்.

Related posts

ஆண்கள் விளாம்பழம் சாப்பிடலாமா?தெரிஞ்சிக்கங்க…

nathan

கருப்பு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

nathan

பெண்களுக்கு ஏற்படும் அபாயகரமான வியாதி களை தொடக்கத்திலேயே முறிந்து போக இத செய்யுங்கள்!….

sangika

ஊறுகாய் அதிகம் சாப்பிடுவதனால் ஆபத்தா! தெரிந்துகொள்வோமா?

nathan

தக்காளியை அதிகம் சாப்பிட்டால் வாழ்நாளின் அளவு குறையுமாம்!

nathan

மிகவும் ஆபத்தான உணவுப் பொருட்கள்!!!

nathan

உடலுக்கு கிடைக்கும் அளப்பரிய அசத்தலான நன்மைகள்..! பிஸ்தா பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்..

nathan

பன்னீர் பற்றி கவனத்தில் வைக்க வேண்டியவை

nathan

சுவையான கம்பு தயிர் சாதம்

nathan