பொதுவாக மாதுளாம் பழத்தை உடல் நலத்திற்காக சாப்பிடுகிறோம். ஆனால் மாதுளைச் செடியின் இலை கொழுந்து, பூ பிஞ்சு, பழம், விதை, பட்டை வேர் அனைத்துமே மருந்தாகப் பயன்படுகிறது.
அதிலும் மாதுளை இலைகள் பல்வோறு நோயை தீர்க்க உதவுகின்றது. தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மாதுளை இலைகள் செரிமான செயல் முறைக்கு நன்மை பயக்கும். வயிற்று வலி மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகள் இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக உட்கொள்ளலாம்.
அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் நீங்கும். இந்த பிரச்சினைகளுக்கு மாதுளை இலைகளை தேநீராக தயாரித்து பருக வேண்டும்.
இருமல், சளி தவிர பிற நோய் பாதிப்புகளுக்கு மாதுளை இலை சாற்றை வாரம் இரண்டு முறை மட்டுமே உட்கொள்ள வேண்டும்
ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை விழுதாக அரைத்து 200 மி.லி. தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். 50 மி.லி. குறையும் வரை கொதிக்கவைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனை இரவில் தூங்குவதற்கு முன்பு பருகி வரலாம். அது ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.
மாதுளை இலைகளை பயன் படுத்தலாம். அதனை விழுதாக அரைத்து நாள்பட்ட அரிப்பு, தோல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. தடிப்பு, வீக்கம், சருமம் சிவத்தல் போன்ற பாதிப்புக்குள்ளான இடத்தில் தடவி வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.