1 coverimage
ஆரோக்கியம் குறிப்புகள்

இப்படி ப்ளான் பண்ணி வேலைப் பண்ணா, அலுவலக மன அழுத்தமே வராது!!!தெரிஞ்சிக்கங்க…

இன்றைய வாழ்க்கை முறையில் அனைவரையும் பாடாய்படுத்தும் உடல்நலக் குறை என்றால் அது மன அழுத்தமாகத் தான் இருக்கும். தலை முதல் கால் வரை இந்த மன அழுத்தத்தினால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

 

அளவுக்கு மீறிய டார்கெட்டில் தொடங்கி, தன்னை சிறந்த பணியாளாகக் காட்டிக் கொள்ள பத்து பேர் அல்லது பத்து நாள் செய்ய வேண்டிய வேலையை ஒரே ஆளாக, ஒரே நாளில் முடிப்பது போன்ற விஷயங்கள் தான், இந்த அலுவலக மன அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாய் இருக்கிறது.

 

உங்கள் வேலையும் கெட்டுப் போகாமல், உடல் நலத்தையும் சீரான முறையில் பாதுகாக்க, வடிவேலு பாணியில்.. “எதுவா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும்…” அந்த பிளான் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா…..

பிடித்த விஷயத்தோடு நாளை துவங்குங்கள்..

காலையில் எழுந்ததுமே அரக்கப்பறக்க ஓடாமல், உங்களது நாளை உங்களுக்கு பிடித்த விஷயத்தோடு ஆரம்பித்தல் பெருமளவில் தலைவலியும், மன அழுத்தமும் குறைய உதவும். நாளிதழ், புத்தகம் படிப்பது, பாடல் கேட்பது, நடனம் என உங்களுக்குப் பிடித்தது எதுவாக இருப்பினும், அந்த செயலோடு உங்கள் நாளைத் துவங்குங்கள்!!

இன்றைய வேலை

இது தான் வடிவேல் பாணி, ” எந்த ஒரு வேலையையும் பிளான் பண்ணி செய்யனும், இல்லாங்காட்டி உங்கள் தல தான் உருளும்..” புரிந்தாதா, காலைக் கிளம்பும் போதே இன்றைய நாள் நீங்கள் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என ஒரு முடிவு எடுங்கள்.

அலுவலக உதவி

உங்கள் வேலையிலேயே ஒரே கம்ப்யூட்டரின் உள்ளே தலையைவிட்டப்படி இருக்காமல், சிறுது நேரம் எழுந்து நடந்து வாருங்கள், உங்கள் சக ஊழியருக்கு ஏதாவது குழப்பம் இருந்தால் அதற்கு தீர்வு கூறுங்கள், உதவி செய்யுங்கள். இது போன்றவை உங்கள் மூளைக்கு அதிக அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவும்.

மகிழ்ச்சி, பாராட்டு

காலை முதல் மாலை வரை ரோபோட் போல அலுவலக வேலைகள் மட்டும் செய்யாது கொஞ்சம் மதிய உணவிற்கு பின் கொஞ்சம் ஓய்வு எடுங்கள். அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுபவர்களைக் கண்டு பொறாமையில் பொங்காமல் பாராட்டுங்கள். அப்போது தான் நீங்கள் சிறப்பாக செயல்படும் பாராட்டுகள் குவியும் . இது உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

நன்றி

நீங்கள் இன்று காலையில் இருந்து செய்த வேலை 100% முழுமையாக அமையாவிடுனும் கூட எவ்வளவு சதவீதம் நீங்கள் முடிதீர்களோ, அது 1% இருந்தாலும் கூட அதற்கு நன்றி கூறுங்கள். உங்கள் பின் ஆயிரம் ஆயிரம் பேர் பூஜ்யமாக இருக்கும் போது நீங்கள் முடித்த 1% பெரிதுதான்.

நேர்மறை எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்களை அதிகப்படுத்திக் கொள்ள பழகுங்கள். பெருபாலும் உங்களது எதிர்மறை எண்ணங்கள் தான் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. நேர்மறை எண்ணங்கள் தான் நீங்கள் வெற்றியடைய உதவும்.

Related posts

வாழ்நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு தினமும் இதனை சாப்பிடுங்கள்.!!

nathan

அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் அருமையான பயன்கள் தரும் வைட்டமின்கள் நிறைந்த கறிவேப்பிலை

nathan

மது உங்களைக் குடிக்கிறதா? அவசியம் படிங்க!…

nathan

குழந்தைகளின் உணவு முறையால் ஏற்படும் ஆரோக்கிய குறைபாடு

nathan

அலட்சியம் வேண்டாம்… கால்மேல் கால்போட்டு உட்காருபவர்களா? உங்களுக்கு இந்த ஆபத்து கண்டிப்பா வருமாம்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரவில் படுக்காமல் அழுது கொண்டே இருக்கும் குழந்தையை தூங்க வைக்க சில வழிகள்!!!

nathan

உடல் எடையை குறைக்க வேண்டுமா? மறந்தும் இதை பயன்படுத்தாதீங்க!

nathan

இந்த 5 ராசி பெண்கள் நாடகமாடுவதில் கில்லாடிகளாம்..தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

can i dye my hair while breastfeeding – தாய்ப்பால் கொடுக்கும் போது என் தலைமுடிக்கு சாயம் பூச முடியுமா?

nathan