நமது உணவுக் கலாசாரத்தில் ருசியை அதிகரிக்க உபயோகப்பட்டுத்தப்படும் உணவுப் பொருள் தான் பெருங்காயம். பெரும்பாலும் நமது உணவுப் பொருள்கள் அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவை தான்.
பெருங்காயத்தில் இருக்கும் மருத்துவக் குணங்கள் பலரது மானத்தை வாங்கும் வாயுப் பிரச்சனையை சரி செய்ய ஒரு சிறந்த இயற்கை மருந்தாக கருதப்படுகிறது. வாயுப் பிரச்னை மட்டுமின்றி வயிறு சார்ந்த பலப் பிரச்சனைகளுக்கு தீர்வு தருகிறது பெருங்காயம்.
நமது வீட்டு ரசம், சாம்பார் மட்டுமல்லாமல் உங்கள் உடலையும் கூட கமகமக்க வைக்கும் திறன் கொண்டது பெருங்காயம். அதன் ஆரோக்கிய மருத்துவ குணங்கள் பற்றி இனி காணலாம்…
பெருங்காயத்தின் வகைகள்
பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என்று இதில் இரண்டு வகை இருக்கிறது. காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம் சுவை நரம்புகளைத் தூண்டி, ருசியை உண்டாக்கும் குணம் கொண்டது.
எளிதில் ஜீரணம்
பெருங்காயம் எளிதில் ஜீரணமாகி, மற்ற உணவுகளையும் சீக்கிரமாக செரிக்க வைக்கும் ஆற்றல் கொண்டது.
வாயுக் கோளாறு
வாயுத் தொல்லை இருப்பவர்களுக்கு பெருங்காயம் ஓர் சிறந்த மருந்து. வாயுக்கோளாறை விரைவிலேயே சரி செய்யும் மருத்துவ குணம் கொண்டது பெருங்காயம்.
தசைகளுக்கு பலம்
பெருங்காயம் தசைகளுக்கு பலம் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.
சிறுநீர் கோளாறு நீங்கும்
சீறுநீர் பிரச்னை உள்ளவர்கள் பெருங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் விரைவில் குணமாகும். சிறுநீர் அளவைப் பெருக்கும் மருத்துவக் குணங்கள் பெருங்காயத்தில் இருக்கிறது.
வயிற்றுப் பிரச்சனைகள் குறைக்கும்
தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் ஏற்படாது.
மலச்சிக்கலை நீக்கும்
மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது பெருங்காயம்.
நுண்ணுயிர் கிருமிகளை அழிக்கும்
பெருங்காயம் குடலில் உள்ளிருக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் குறைக்கின்றது. வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.
ஸ்வைன் ஃப்ளூவை எதிர்க்கும்
பெருங்காயத்தின் வேர்கள் ஸ்வைன் ஃப்ளூ வைரசைக் கொல்லும் இயற்கையான வைரஸ் எதிர்ப்பு மருந்து என மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.