31.9 C
Chennai
Friday, Jul 26, 2024
hatareruiningyourdiet
ஆரோக்கியம் குறிப்புகள்

தெரிஞ்சிக்கங்க…உணவுக் கட்டுப்பாட்டை சீரழிக்கும் பத்து பழக்கவழக்கங்கள்!!!

மனதை பத்திரமாக வைத்துக் கொள்ளவிட்டால் “வுமென்” (Women) கவ்வி சென்றுவிடுவார்கள். உடலை பத்திரமாக வைத்துக் கொள்ளாவிட்டால் “எமன்” கவ்வி சென்றுவிடுவார். எனவே, பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமை. நீங்கள் நினைக்கலாம் நான் சரியான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து வருகிறேன். எனக்கு ஒன்றும் ஆகாது என.

 

நம்மிடம் இருக்கும் கெட்டப் பழக்கமே நல்லோதோடு சேர்த்துக் கொஞ்சம் தீமையும் செய்வது தான். காலை, மதியம், இரவு என சரியான உணவுகளை பரிந்துரையின் பேரில் சரியான அளவில் சாப்பிட்டாலும், கூடவே நண்பகல், மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி, குளிர் பானங்கள், சாட் உணவுகள் என வயிற்றுக்குள் எவ்வளவு “புள்” பண்ண முடியுமா அவ்வளவு “புள்” பண்ணி “ஃபுல்” பண்ணிவிடுவோம்.

 

இது மாதிரி, உங்களுக்கே தெரியாமல் உங்கள் உணவுக் கட்டுப்பாட்டை சீரழிக்கும் பழக்கங்கள் சில பல இருக்கின்றன, அதைப் பற்றி தான் இங்குப் பார்க்க போகிறோம்….

உணவிற்கு இடையே நொறுக்குத் தீனி

பஜ்ஜி, போண்டாவில் ஆரம்பித்து டோனட்ஸ், பிட்சா வரை மொச்சக்கு மொச்சக்கு என்று மதிய உணவிற்கு மத்தியில் உண்பது நமது பாரம்பரிய வழக்கமாகிவிட்டது. இதை முதலில் நிறுத்த வேண்டும். இது தான் உங்கள் உணவுக் கட்டுப்பாட்டை சீரழிக்கும் முதல் விரோதி.

தண்ணீர்

நீங்கள் என்ன டயட்டில் இருந்தாலும் தண்ணீர் அருந்த வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும். குறைந்தது ஒரு நாளுக்கு 3 லிட்டர் அல்லது 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

சாப்பாடை தவிர்ப்பது

பெரும்பாலும் அலுவலக வேலைகளில் இருப்பவர்கள் தான் அவர்களது மதிய உணவைத் தியாகம் செய்யும் பெரும் தியாகிகள். மதிய உணவைத் தவிர்க்கவே கூடாது. இது உங்கள் உடலை மிகவும் சோர்வடைய செய்யும்.

பழங்கள்

பழங்கள் இல்லாத உணவுக் கட்டுப்பாடு, உப்பில்லாத சாப்பாட்டைப் போல. எனவே, பழங்கள் சாப்பிடுவது மிகவும் அவசியம். அப்போது தான் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கும். ஜூஸாக இல்லாமல் அப்படியேக் கடித்து சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது.

அரிசி சாதம்

முடிந்த வரை சாதத்தை தவிர்த்துவிடுங்கள், அதற்கு பதிலாக சப்பாத்தி அல்லது ரொட்டி சாப்பிடலாம்.

வாயு ஏற்றப்பட்ட பானங்கள்

கூல்ட்ரிங்க்ஸ் மற்றும் சோடா பானங்கள் குடிப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். “டயட்” என்று சொல்லி விற்கப்படும் பானங்களும் கூட உங்கள் உடல் எடையை அதிகரிக்க செய்யும் தன்மை வாய்ந்தது தான்.

உடற்பயிற்சி

வெறுமென உணவுக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தால் மட்டும் போதாது. உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். குறைந்தது காலை, மாலை இரு வேளைகளிலும் அரைமணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, புல்-அப்ஸ் போன்ற எளிதான பயிற்சிகளையாவது மேற்கொள்ளுங்கள்.

தெருவோரக் கடை உணவுகள்

சுகாதாரமற்ற தெருவோர உணவுகள் உட்கொள்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் டயட்டை சீரழிக்கும் மற்றொரு தீயப் பழக்கம் இதுவாகும்.

Related posts

உடல் எடை மற்றும் தாய்ப்பால் இரண்டிலும் ஏன் பெண்கள் கவனம் தர வேண்டும்?

nathan

இந்த 5 ராசிக்காரங்கள எல்லாரும் மனசுக்குள்ள ரொம்ப வெறுப்பாங்களாம்…

nathan

நெற்றியில் நாமம் இடுவதற்காக பயன்படுத்தும் நாமக்கட்டி… நாமக்கட்டியின் நன்மைகள்..

nathan

தெரிஞ்சிக்கங்க…இருபது வயதுகளில் பெண்கள் தம்மை அறியாமல் செய்யக்கூடிய தவறுகள்!!!

nathan

பற்களை பாதுகாகும் மவுத் வாஷ்

nathan

கொளுத்தும் வெயிலில் கலர், கலரான குளிர்பானங்கள் வேண்டாமே…! ((Don’t go for Soft Drinks in Summer..!)…

nathan

தினமும் எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிக்க வேண்டும்?

nathan

நீரழிவின் எதிரி செர்ரி

nathan

பற்களை வெள்ளையாக பளிச்சென்று வைத்துக் கொள்ள சூப்பர் டிப்ஸ்!

nathan