capsicum pulao
ஆரோக்கிய உணவு

சூப்பரான குடைமிளகாய் புலாவ்

காலையில் மிகவும் சிம்பிளாக ஏதேனும் வெரைட்டி ரைஸ் செய்ய நினைத்தால், குடைமிளகாய் புலாவ் செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் சிம்பிளான மற்றும் காலையில் செய்வதற்கு ஏற்றவாறு ஈஸியாகவும் இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.

சரி, இப்போது அந்த குடைமிளகாய் புலாவ் எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Easy Capsicum Pulao
தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 1/2 கப்
குடைமிளகாய் – 1/4 கப்
ஏலக்காய் – 1
கிராம்பு – 2
பட்டை – 1/4 இன்ச்
கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரைப்பதற்கு…

பூண்டு – 3 பற்கள்
மிளகு – 1/2 டீஸ்பூன்
முந்திரி – 5

செய்முறை:

முதலில் அரிசியை நீரில் போட்டு 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும். நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரிசியை போட்டு, உப்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து, அரிசியானது வெந்ததும், அதனை இறக்கி நீரை வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகம் சேர்த்து தாளித்து, பின் முந்திரி பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

பின் அதில் குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பின் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் கிளறி, தேவையான அளவு உப்பு தூவி நன்கு பிரட்டி, சாதத்தை சேர்த்து 2-3 நிமிடம் நன்கு பிரட்டி இறக்கினால், குடைமிளகாய் புலாவ் ரெடி!!!

Related posts

தெரிஞ்சிக்கங்க…30 வயதிற்கு மேல் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சாப்பிட வேண்டிய உணவுகள்!

nathan

வாழைத்தண்டு ஆச்சரியங்கள்! சர்க்கரை நோயை தடுக்கும்! உடலின் நச்சுக் கழிவுகள் வெளியேறும்…

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…வயதானவராக மாற்ற கூடிய அன்றாட பழக்க வழக்கங்கள்…!

nathan

படிக்கத் தவறாதீர்கள்! 1 முதல் 3 வயது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள்

nathan

நம் ஆரோக்கியத்தை காக்கும் மண் பாண்ட சமையல்

nathan

தெரிஞ்சிக்கங்க…உங்க சிறுநீரகங்களை பாதுகாக்க இந்த 7 உணவுகள் போதுமாம்..!

nathan

சோள ரொட்டி

nathan

சமையலறையை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும் பொருட்கள்!!!

nathan

கொழுப்பைக் குறைக்கும் கொண்டைக்கடலை

nathan