25.6 C
Chennai
Friday, Sep 19, 2025
Tamil News Pomegranate leaves medicine
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா மாதுளை இலைகளும் மருந்தாகும்..

இருமல், சளி:

மாதுளை பழத்தை போலவே, இலைகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுபவை. சளி மற்றும் இருமல் இருந்தால், மாதுளை இலைகளை கொண்டு காபி தயாரித்து பருகலாம். இந்த செயல்முறை எளிதானதுதான். ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். இலைகள் நன்கு வெந்ததும் வடிகட்டி பருகலாம். இந்த தண்ணீரை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் இருமல் தணியும். தொண்டையில் இருக்கும் நோய்த்தொற்றை அகற்ற உதவும். மாதுளையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்பதால் நோய் எதிர்ப்பு தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம்.

வயிற்று வலி:

மாதுளை இலைகள் செரிமான செயல் முறைக்கு நன்மை பயக்கும். வயிற்று வலி மற்றும் அது தொடர்பான பிற பிரச்சினைகள் இருந்தால், மாதுளை இலைகளை மருந்தாக உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் செரிமானத்தை தூண்ட உதவும். அதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். அத்துடன் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் நீங்கும். இந்த பிரச்சினைகளுக்கு மாதுளை இலைகளை தேநீராக தயாரித்து பருக வேண்டும். இருமல், சளி தவிர பிற நோய் பாதிப்புகளுக்கு மாதுளை இலை சாற்றை வாரம் இரண்டு முறை மட்டுமே உட்கொள்ள வேண்டும். மாதுளை இலைகளை அதிகம் உட்கொள்வது பல்வேறு பக்க விளைவுகளுக்கு வழி வகுத்துவிடும்.

தூக்கமின்மை:

மாதுளை இலைகள், தூக்கமின்மைக்கும் நிவாரணம் தரக்கூடியவை. ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை விழுதாக அரைத்து 200 மி.லி. தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். 50 மி.லி. குறையும் வரை கொதிக்கவைத்து, வடிகட்டிக்கொள்ளவும். அதனை இரவில் தூங்குவதற்கு முன்பு பருகி வரலாம். அது ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

தோல் அழற்சி:

நாள்பட்ட அரிப்பு, தோல் அழற்சி என்றும் அழைக்கப்படுகிறது. தடிப்பு, வீக்கம், சருமம் சிவத்தல் போன்ற பாதிப்புகளையும் எதிர்கொள்ள நேரிடும். இந்த நோயை குணப்படுத்த மாதுளை இலைகளை பயன் படுத்தலாம். அதனை விழுதாக அரைத்து பாதிப்புக்குள்ளான இடத்தில் தடவி வரலாம். நல்ல பலன் கிடைக்கும்.

Courtesy: MalaiMalar

Related posts

பணியிடத்தில் வரும் தூக்கத்தைத் தடுப்பது எப்படி?

sangika

உடல் ஆரோக்கியத்திற்கு புதினாக்கீரை!…

sangika

அக்குள் மிகவும் கருமையாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன….

sangika

அதிகாலை எழுதவதன் 5 பயன்கள்

nathan

தெரிஞ்சிக்கங்க…நாம் சாப்பிடும் உணவை வேகமாக சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா?

nathan

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன?

nathan

தொப்பையைக் குறைக்க வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

இதோ எளிய நிவாரணம்.. உலர்ந்த இஞ்சியின் பயன்கள் என்ன ??

nathan

மாதவிடாய் கோளாறால ரத்தப் போக்கு அதிகமா வந்தாலும் ஆபத்து.

nathan