28.9 C
Chennai
Wednesday, Jan 28, 2026
18 15
ஆரோக்கியம் குறிப்புகள்

விவாகரத்தால் பாதிக்கப்படும் குழந்தைகளின் நிலைமை என்ன ? தெரிந்துகொள்வோமா?

திருமணம் என்பது ஒரு அழகான சடங்கு. இந்த சடங்கிற்கு உயிர் கொடுப்பது போல் அமைவது திருமணத்தில் கணவன் மனைவியாக இணையும் இருவரின் உறவு. இந்த உறவில் ஏற்படும் விரிசல் காரணமாக இருவரும் விலக நினைத்து விவாகரத்து பெரும் போது மனதளவில் இருவரும் பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர், இதற்கிடையில் இவர்களை விட அதிகம் பாதிக்கப்படுவது இவர்களின் குழந்தைகள் .

ஒருவர் ஒருவராய் பிறந்து பின் இருவராய் இணையும் இந்த திருமண பந்தத்தில் பல்வேறு பிரச்சனைகள் தலை தூக்கும். அவற்றை கணவனும் மனைவியும் இணைந்து களையும் போது இத்தகைய பாதிப்புகள் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இன்றைய சமூகத்தில் தாயோ அல்லது தந்தையோ தனியாக குழந்தையை வளர்ப்பது என்பது ஒரு சவாலான செயல். தனி ஒருவரால் வளர்க்கப்படும் குழந்தைக்கு பலவித பிரச்சனைகள் உடல் மற்றும் மனதளவில் ஏற்படுகிறது.

how divorce affects your children
அவற்றை பற்றிய ஆய்வுதான் இந்த தொகுப்பு. இதனை அறிந்து கொள்வதன் மூலம், தனியாக வளர்க்கப்படும் குழந்தைகளை நேர்மறை எண்ணத்துடன்,பாதுகாப்பாக நல்ல குணாதிசயத்துடன் வளர்க்க முடியும்.

கணவன் மனைவி பிரிவு குழந்தையை எப்படி பாதிக்கிறது?

பெற்றோரின் விவாகரத்து அல்லது பிரிவு, சிறு குழந்தை முதல் பதின் பருவ பிள்ளைகள் வரை எல்லோரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அவற்றை பற்றி இப்போது பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1 கைக்குழந்தைகள் :(0-8 மாத குழந்தைவரை)
1 கைக்குழந்தைகள் :(0-8 மாத குழந்தைவரை)
இந்த பருவத்தில் தான் குழந்தைகள் மற்றவர்களை பார்த்து அவர்களை போன்றே நடக்க தொடங்குவர். இந்த நேரத்தில் அவர்களுக்கு நல்ல நடத்தையை புகட்டுவது பெற்றோரின் கடமை.

மிகவும் சிறிய குழந்தைகளுக்கு பெற்றோரின் பிரிவை எடுத்துரைக்க தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் உங்கள் அல்லது உங்கள் துணையின் நடத்தையில் உள்ள மாற்றத்தை பின்பற்ற தொடங்குவர். இதனால் அவர்கள் நன்நடத்தை பாதிக்கப்படக்கூடும்.

ஆர்வமின்மை :

எப்போதும் கண்டறியாத ஒரு ஆர்வமின்மை அவர்களிடம் வெளிப்படும். அது அவர்கள் தொடர்ந்து செய்யும் செயல்களில் அல்லது தொடர்ந்து பழகும் மனிதர்களிடம் உண்டாகும். இதன்மூலம் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புரிந்து கொள்ளலாம். நீங்கள் உங்கள் துணைவரின் பிரிவால் மன அழுத்தத்தில் இருப்பதால் குழந்தையை சரியாக கவனிக்க முடியாததால் இந்த நிலை ஏற்படுகிறது .

பெற்றோரை நோக்கிய பதட்டம்:

6-8 மாதம் உள்ள குழந்தைகள் பெற்றோரின் முகத்தை அதிகமாக பார்க்க நேரிடும். இந்த நிலையில் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவரின் முமுகத்தை அடிக்கடி காண முடியாததால் ஒரு வித பதட்ட நிலை அவர்களுக்கு உண்டாகிறது.

தவழும் குழந்தைகள்(8 மாதம் முதல் 18 மாத குழந்தை வரை):
தவழும் குழந்தைகள்(8 மாதம் முதல் 18 மாத குழந்தை வரை):
இந்த பிரிவில் வரும் குழந்தைகள் தங்கள் பெற்றோரை அடையாளம் கண்டு ஞாபகத்தில் வைத்து கொள்ள முடியும்.

பிரிவு துயர்:

8 மாதம் முதல் 12 மாதங்கள் ஆன குழந்தைகளுக்கு இந்த பிரிவு துயர் உண்டாகிறது. தாயோ அல்லது தந்தையோ, இல்லாதவரின் இடத்தை நிரப்ப முயற்சிக்கும்போது இந்த குழந்தைகளால் அதனை ஏற்று கொள்ள முடியாமல், அதிகமாக அழுவது, கத்துவது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர். இந்த நேரத்தில் பெற்றோர், அவர்களை அமைதி படுத்துவது முக்கியம்.

பயம், குழப்பம் மற்றும் பாதுகாப்பின்மை :

குழந்தைகள் இருக்கும்போது கணவன் மனைவி விவாதங்களில் ஈடுபடும்போது, அது குழந்தைகளின் மனதை பாதிக்கிறது. இதனால் அவர்கள் குழப்பமடைகின்றனர். பயம் உண்டாகிறது.

இணக்கமற்ற தன்மை:

பெற்றோரில் ஒருவர் மற்றொருவரிடம் அதிகாரமாக பேசும் போது, அவர்களிடம் குழந்தைகள் இணக்கமாக இல்லாமல் விலக நேரிடுகிறது. நல்ல குணம் கொண்ட குழந்தைகள் கூட கோபம் படும் சூழல் உண்டாகிறது.

2 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள்:

இப்பருவத்தில் இருக்கும் குழந்தைகள் மனநிலை அடிக்கடி மாறுபடுவதாக உள்ளது. சில நேரம் மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் அடுத்த சில நிமிடங்களில் அதிக கோபம் கொண்டவர்களாக மாறுகின்றனர். சூழ்நிலையை கையாள தெரியாமல் அவர்களுக்கு ஒரு வித பாதுகாப்பின்மை தோன்றுகிறது. அவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்ய யார் உள்ளனர் என்று தெரியாமல் இத்தகைய நிலை ஏற்படுகிறது. இத்தைகைய குழந்தைகளுக்கு ஏற்படும் சில தொந்தரவுகளை இப்போது பார்க்கலாம்.

சண்டித்தனம்:

சில குழந்தைகள் அதிகமாக அழுவது, சண்டித்தனம் செய்வது , நடிப்பது போன்ற செயலில் ஈடுபடலாம். சிலர், முன்பை விட அதிக அமைதியாக இருக்கலாம். சில குழந்தைகள் கடிப்பது, அடிப்பது, எட்டி உதிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர்.

தூக்கமின்மை :

சில குழந்தைகளுக்கு தூங்குவதில் சிரமம் உண்டாகலாம். அப்படி தூங்கினாலும் அடிக்கடி கண் விழித்தல், நிறைய கனவு தோன்றுதல் , ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் இருத்தல் போன்றவை ஏற்படும்.

நடத்தையில் மாற்றம்:

திடீரென்று விரல் சப்பும் பழக்கம் உண்டாவது, கை குழந்தையாக இருக்கும்போது செய்த செயல்களை செய்ய சொல்லி அடம் பிடிப்பது போன்றவை ஏற்படும்.

செரிமான கோளாறு மற்றும் வயிற்று வலி:

அவர்களுக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் சரியாக உணவு உண்ணாமல் வயிற்றில் வலி உண்டாகும்.

இளம் வயது பிள்ளைகள்:

குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை ஏற்படும் போது அவர்களின் வயதை விட குறைந்தவர்களாக அவர்கள் நினைக்க தொடங்குகின்றனர் . கீழ் கண்டவற்றை அவர்கள் உணர்கின்றனர்.

சில குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து பிரிக்கப்படும்போது அதிகமாக அழுவது மற்றும் அவர்களை ஒட்டி கொன்டே இருக்கும் செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றை செய்கின்றனர்.

கீழ்படியாமை:

சிலர் பெற்றோருக்கு இணக்கமில்லாதவர்களாகவும், கீழ்படியாமலும் இருப்பர். இத்தகைய நடவடிக்கை பெற்றோரின் பிரிவிற்கு பிறகு தான் உண்டாகிறது. அதுவரை நல்ல பிள்ளைகளாக இருந்தவர்கள் அவர்களின் நல்ல குணங்களை இழக்கின்றனர்.

படுக்கையில் சிறுநீர் கழித்தல்:

பெற்றோர்கள் தனித்தனியே இருக்கும் போது, யாருடன் குழந்தை அதிக நேரம் செலவிடுவதில்லையோ, அவர்களை சந்திக்கும் நேரத்தில், இரவில் அதிகமான கனவுகள் அல்லது படுக்கையில் சிறு நீர் கழிப்பது போன்றவை ஏற்படுகின்றன.

பள்ளியில் கவனக்குறைவு:

பெற்றோர்கள் விவாகரத்து அல்லது பிரிந்து இருப்பது குழந்தைகளின் படிப்பை பெரியளவில் பாதிக்கிறது. கவன சிதைவு ஏற்படுவதால் அவர்களின் மதிப்பெண்கள் குறைகிறது.

பதின் பருவம் மற்றும் வாலிப வயதினர்:
பதின் பருவம் மற்றும் வாலிப வயதினர்:
பெற்றோர்கள் பிரிந்து இருக்கும் போது, பதின் பருவ வயதில் இருப்பவர்கள், மற்றவர்களுக்கு மத்தியில் இயல்பாக இருந்தாலும் அவர்கள் ஆழமான அழுத்தத்தில் தான் இருக்கின்றனர்.

தனிமை விரும்பி:

வாலிப வயதில் உள்ளவர்கள், எல்லா செயலிலும் ஒதுங்கியே இருப்பர். சமூக செயல்களிலும் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளாமல் குடும்பத்திடம் இருந்தும் தனித்தே இருப்பர்.

வழி தவறி செல்லுதல்:

இந்த வயதில், அவர்களின் நடத்தையில் சில மாற்றங்கள் ஏற்படலாம். அவர்களின் படிப்பில் கவனம் குறையலாம்.

பொறுப்புடன் இருக்கலாம்:

பெற்றோரில் ஒருவர் இல்லாத காரணத்தால் அவர்களின் பொறுப்புணர்வு அதிகமாகலாம். இது ஒரு நேர்மறை விளைவு தான். இதனால் அவர்களின் திறனும் அதிகரிக்கலாம்.

கணவன் மனைவிக்குள் மனக்கசப்புகள் இருந்தாலும் குழந்தையின் மீதுள்ள அக்கறையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருப்பது அவசியம். அவர்களின் நம்பிக்கையை குலைக்கும் விதத்தில் பெற்றோர் நடப்பதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகளுக்கு பெற்றோர் மீதுள்ள நம்பிக்கை குறையும் போது சமூகத்தின் மீதுள்ள நம்பிக்கையும் குறைய தொடங்குகிறது. இதனால் பல வித தீவிரவாத செயல்களும் ஊக்குவிக்கப்படுகின்றன. குழந்தைகளின் வாழ்க்கை பாதையை சீராக ஆக்குவது ஓவ்வொரு பெற்றோரின் தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்படுவது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லது.

Related posts

நீங்கள் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இத ஃபாலோ பண்ணுங்க…

nathan

ஆரோக்கியமற்ற உணவை நிராகரிக்க உங்கள் மூளையை பழக்க இதோ சில வழிகள்!….

sangika

தெரிஞ்சிக்கங்க…காலையில் எழுந்ததும் நீங்கள் செய்யக்கூடாத விடயங்கள் என்னென்ன தெரியுமா?

nathan

முதுமையும் மன ஆரோக்கியமும்

nathan

தெரிஞ்சிக்கங்க…உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பானங்கள்!!!

nathan

இந்த உணவுகளை மறக்காமல் சாப்பிடுங்க போதும்!

nathan

குழந்தைகளின் வயிற்றுப் போக்கு

nathan

இந்த 5 ராசிக்காரங்க மாதிரி மோசமான சுயநலவாதியா இருக்க யாராலும் முடியாதாம்… தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

வீட்டில் செடிகளை வளர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan