empty pocket
ஆரோக்கியம் குறிப்புகள்

வாஸ்துப்படி, இந்த பழக்கங்களை உடனே கைவிடுங்க… தெரிஞ்சிக்கங்க…

இந்த உலகில் உள்ள ஒவ்வொருவருமே நல்ல ஆடம்பரமான வாழ்க்கையையே வாழ விரும்புகிறோம் மற்றும் அதைப் பெறுவதற்கு கடினமாக உழைத்து பணத்தை சம்பாதிக்கிறோம். ஆனால் சில நேரங்களில் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் முழுமையாக கிடைக்காமல் போகும். இம்மாதிரியான சூழ்நிலைகளில் ஒருசில மோசமான பழக்கங்களால் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவியின் அதிருப்தியை ஒருவர் எதிர்கொள்ள நேரிடுகிறது.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, நமது ஒவ்வொரு பழக்கவழக்கங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள விஷயங்கள் மற்றும் திசைகள் நம் மீது ஆழமான தாக்கத்தை உண்டாக்குகின்றன. இன்று நாம் பார்க்கவிருப்பது, இதுப்போன்று மோசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பழக்கவழக்கங்களைப் பற்றி தான். இந்த பழக்கங்கள் உங்களிடம் இருந்தால், உடனே அதை மாற்றிக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பண பிரச்சனையுடன் வறுமையை சந்திக்க நேரிடும்.

சமையலறையை சுத்தம் செய்யாமல் இருப்பது

பெண்களில் பெரும்பாலானோர் சமையலறையில் வேலை செய்த பிறகு சுத்தம் செய்ய மறந்துவிடுவார்கள். ஆனால் இப்படி அழுக்குடன் சமையலறையை வைத்திருந்தால், அதனால் நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. சமையலறையின் உறவு நமது ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. வாஸ்து படி, சமையலறையில் கிடக்கும் அழுக்கு பாத்திரங்கள் நிதி பிரச்சனைகளை உருவாக்கும். எனவே, ஒவ்வொரு வேளை சமையலை முடித்த பின்னரும் சமையலறையை உடனே சுத்தம் செய்யுங்கள். அதோடு இரவு தூங்கும் முன்பே பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி, சமையலறையை சுத்தம் செய்துவிடுங்கள்.

படுக்கையிலேயே சாப்பிடுவது

பலருக்கு படுக்கையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் இருக்கும். ஆனால் வாஸ்து படி, படுக்கையில் அமந்து சாப்பிடுவது கடன் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே நீங்கள் உங்கள் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காமல் கஷ்டப்பட்டால், இப்பழக்கம் உங்களிடம் இருப்பின், உடனடியாக அந்த பழக்கத்தை விட்டுவிடுங்கள்.

மாலையில் புளிப்பான பொருட்களை மற்றவர்களுக்கு கொடுப்பது

வாஸ்து படி, மாலை வேளையில் எப்போதும் யாருக்கும் தயிர், ஊறுகாய் போன்ற புளிப்பான பொருட்கள் மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது. ஏனெனில் இந்த பொருட்களில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள். எனவே இந்த பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கும் போது, அது வீட்டின் ஆரோக்கியத்தைக் குறைப்பதோடு, பணப் பிரச்சனையையும் சந்திக்க நேரிடும்.

குளியலறை மற்றும் சமையலறையில் காலியான வாளி வைத்திருப்பது

வாஸ்து படி, குளியலறையில் உள்ள வாளியை நீரின்றி காலியாக வைத்திருப்பது வீட்டில் பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும். எனவே இம்மாதிரியான பழக்கத்தை உடனே தவிர்த்திடுங்கள். இது தவிர, சமையலறையில் தண்ணீர் பாத்திரங்களை, அதாவது குடம் போன்றவற்றை காலியாக வைத்திருப்பதும் அசுபமாகக் கருதப்படுகிறது.

உப்பு, மஞ்சள்

சூரியன் மறைந்த பின்னர் எப்போதும் யாருக்கும் உப்பு, மஞ்சள் போன்ற லட்சுமி தேவி வாசம் செய்யும் பொருட்களை மற்றவர்களுக்கு கொடுக்கக்கூடாது. அப்படி கொடுத்தால், உங்கள் வீட்டில் உள்ள லட்சுமி தேவி அவர்களது வீட்டிற்கு சென்றுவிடுவாள். பின் நீங்கள் வறுமையில் வாட வேண்டியிருக்கும்.

Related posts

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… அப்பாவாக ஒரு ஆண் செய்யும் இந்த ஒரு தவறின் விளைவுகள் என்னென்ன தெரியுமா?

nathan

உங்கள் கோபக்கார மனைவியை சமாளிக்க இதோ ஒரு சில டிப்ஸ்….

nathan

நீங்கள் 1ம் எண்ணில் பிறந்தவரா? கட்டாயம் இதை படியுங்கள்

nathan

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்தால் இதயநோய் வருவதை தடுக்கலாம்

nathan

உயிரையுமா பறிக்கும் குளிர்பானம்?

nathan

பீட்ரூட் தீர்க்கும் நோய்கள்!…

nathan

P அல்லது Rல் உங்கள் பெயர் துவங்குகிறதா?சுவாரஸ்யத் தகவல்…

nathan

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் என்ன?

nathan

கேள்விப்பட்டிருக்கின்றீர்களா தாய்ப்பாலில், அலங்கார நகைகள் பற்றி?

nathan