நாம் அன்றாட பயன்படுத்தும் சர்க்கரையில் கலப்பட பொருளாக யூரியாவை பயன்படுத்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
அப்படி யூரியா கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை நாமே கண்டுப்பிடிக்க முடியும்.
இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சர்க்கரையில் உள்ள கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது?
முதலில் சிறிது சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை கண்ணாடி அல்லது சாதாரண டம்ளரில் ஊற்றியுள்ள தண்ணீரோடு சேர்த்துக்கொள்ளவும். இப்போது சர்க்கரை நன்றாக கரையும் வரை கலக்கவும்.
நீங்கள் கரைத்து வைத்துள்ள சர்க்கரை தண்ணீரில் அமோனியா வாசனை இல்லை என்றால், அது கலப்படமற்றது.
அமோனியா வாசனை தெரிந்தால் அது கலப்படம் செய்யப்பட்டது.
அம்மோனியா வாசனையை எப்படி தெரிந்து கொள்வது?
அம்மோனியா, நிறமற்ற வாயு, நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனின் கலவை ஆகும். இது சிறுநீர் அல்லது வியர்வை போன்ற கடுமையான வாசனையைக் கொண்டுள்ளது.
இந்த வாயு கலவை இயற்கையாகவே நீர், மண் மற்றும் காற்றில் காணப்படுகிறது, மேலும் இது தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனித உடலிலும் காணப்படுகிறது என்று மருத்துவநியூஸ்டுடே.காம் கூறுகிறது.