36.3 C
Chennai
Friday, Jul 11, 2025
p75a
ஆரோக்கியம் குறிப்புகள்

‘வீணாகிறதே’ என்று சாப்பிட்டால்… வீணாகிவிடும் உடம்பு!

பொதுவாக, வீட்டில் மீதமாகும் உணவுகளை எல்லாம் ‘அய்யோ… காசு போட்டு வாங்கி, கஷ்டப்பட்டு சமைச்சு, எல்லாம் வீணாப்போகுதே…’ என்பதற்காகவே சாப்பிடும் பெண்கள் இங்கு பலர். ”அப்படி வீட்டினர் வீணாக்கும் உணவுகளை, வீணாக்காமல் சாப்பிடுவதாக எண்ணி தேவைக்கும் அதிகமாகச் சாப்பிடுவதால் அது உங்கள் உடம்புக்குச் செய்யும் கெடுதல்கள் பல!” என்று அவசியத் தகவல் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் நித்யஸ்ரீ.

ஊட்டச்சத்து அதிகமானால்… ஊளைச்சதை!
”ஊட்டச்சத்துகளை பொதுவாக மைக்ரோ மற்றும் மேக்ரோ என்று இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இதில் எந்த வகையை அதிகமாக உட்கொண்டாலும், பக்கவிளைவுகள் பரிசாகக் கிடைக்கும்.
கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவை மேக்ரோ ஊட்டச்சத்துகள். வீட்டில் மீதமாகும் உணவுகளில் முதல் இடம் பிடிப்பது, சாதம் மற்றும் அரிசி சார்ந்த உணவுகள்தான். கார்போஹைட்ரேட் உணவுகளான இவற்றை தேவைக்கும் அதிகமாக சாப்பிட்டுக்கொண்டே இருந்தால், உடலின் தேவைக்கும் அதிகமான கார்போஹைட்ரேட் கொழுப்பாக உடலில் சேர்ந்துக்கொண்டே இருக்கும். இன்னொருபுறம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகமாகிக்கொண்டே போய் சர்க்கரை நோயில் முடியும்.

ஒரு நாளில் கல்லீரலில் 400 கிராம் வரைதான் கார்போஹைட்ரேட் சேர வேண்டும். அதற்கும் அதிகமாக சேரும்போது அது கொழுப்பாக மாறி, `ஒபிசிட்டி’யை ஏற்படுத்தும். இன்சுலின் சுரப்பில் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.
p75a

Related posts

தெரிந்துகொள்வோமா? பெண்களின் வயதும்.. குழந்தை பாக்கியமும்…

nathan

குறட்டை பிரச்சனைக்கு எளிய இயற்கை மருத்துவம்

nathan

வெந்நீர் Vs ஜில் நீர்… எந்த குளியல் பெஸ்ட்?

nathan

இந்த ராசிக்காரர்களை திருமணம் செய்தால் கொடுத்து வைத்த மனைவி

nathan

உடல் எடையை கட்டுக்குள் வைக்க!… இதை மட்டும் சரியாக செய்தாலே போதும்

nathan

தாய்ப்பால் குழந்தைகள் குடிக்கும்போது மார்பகத்தை ஏன் கடிக்கிறார்கள் தெரியுமா?

nathan

உடல் அழகை மேம்படுத்தும் ஆயுர்வேதிக் மலையாள மசாஜ் சிகிச்சை

nathan

ரத்தத்தை சுத்தமாக வைப்பது எப்படி?

nathan

சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

nathan