ஒருவரது குணாதிசயங்களை பல்வேறு வழிகளின் மூலம் அறிந்து கொள்ள முடியும். அதில் ஒருவரது பிறந்த தேதி, பிறந்த மாதம், ஒருவரது பழக்கவழக்கம், உடல் அமைப்பு, ராசி, பெயரின் முதல் எழுத்து, கையெழுத்து போன்றவை குறிப்பிடத்தக்கவை. இவற்றைப் போல ஒருவரது குணாதிசயத்தை, அவர் குடும்பத்தில் மூத்த குழந்தையா, நடுத்தர குழந்தையா அல்லது கடைசி குழந்தையா என்பதைக் கொண்டும் சொல்ல முடியுமாம்.
நீங்கள் உங்கள் வீட்டில் கடைக்குட்டியாக இருந்தால், நிச்சயம் நீங்கள் தான் அனைவருக்குமே செல்லப் பிள்ளையாக இருப்பீர்கள். அதே சமயம் முதலில் மற்றும் நடுவில் பிறந்தவர்களாக இருந்தால், அன்பு மற்றும் பாசம் சரிசமமாக பிரிக்கப்பட்டு காண்பிக்கப்படுவது போன்ற உணர்வு அவர்களுக்குள் இருக்கும்.
Do You Know That Your Birth Order Influences Your Personality?
பொதுவாக ஒரு வீட்டில் மூத்த பிள்ளை மிகவும் பொறுப்பாகவும், இளைய பிள்ளை மிகவும் சேட்டை செய்பவராகவும் இருப்பர் என்று சொல்வதுண்டு. இப்படி பிறப்பு வரிசை ஒருவரது குணாதிசயங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. பிறப்பு வரிசையைக் கொண்டு ஒருவரது குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம் என ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
சரி, நீங்கள் உங்கள் வீட்டில் மூத்தவரா, நடுவில் பிறந்தவரா அல்லது கடைக்குட்டியா? உங்கள் ஒவ்வொருவரின் குணாதிசயமும் எப்படி இருக்கும் என்பது குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.
மூத்த குழந்தைகள்
இதுக்குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், ஒரு குடும்பத்தில் முதலில் பிறந்த குழந்தைகள், குடும்பத்தை ஆளும் சக்தி வாய்ந்தவராகவும், பொறுப்புள்ளவர்களாகவும், அதிக அக்கறை கொண்டவர்களாகவும் இருப்பர் என தெரிய வந்துள்ளது. மேலும் இவர்கள் என்ன தான் தன் இளைய தங்கை மற்றும் தம்பிகளுடன் சண்டைப் போட்டுக் கொண்டாலும், அவர்கள் மீது அலாதியான அன்பையும், அக்கறையும் கொண்டவர்களாக இருப்பர்.
தொடர்ச்சி…
மூத்த குழந்தைகள் தன் உடன் பிறப்புகளுக்கு பெற்றோருக்கு அடுத்தப்படியான நிலையில் இருப்பதால், இவர்களிடம் ஒரு பெற்றோருக்கு இருக்கும் குணங்கள் இருக்கும். இவர்கள் சற்று பழைமைவாதிகளாக காணப்பட்டாலும், எப்போதும் லட்சியத்தை அடையும் நோக்கத்தைக் கொண்டவர்களாக இருப்பர். இவர்களிடம் தலைமைப் பண்புகள் அதிகம் இருக்கும். ஒரு குடும்பத்தில் மூத்தவராக பிறந்தவர்களுக்கு, எப்போதும் எதிலும் முதலாவதாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்கும்.
நடுவில் பிறந்த குழந்தைகள்
ஒரு குடும்பத்தில் மூத்த குழந்தை அன்புடையவராகவும் நடுவில் பிறந்தவர்கள் எப்போதும் விட்டுக் கொடுப்பவர்களாக இருப்பர். நடுத்தர குழந்தைகள் ஒவ்வொரு விஷயத்தையும் செய்ய முயற்சிக்கும் போது மிகவும் கஷ்டப்பட்டு தான் செய்து முடிப்பார்கள். இதனாலேயே நடுத்தர குழந்தைகள், ஒரு லட்சியத்துடன் வாழ்க்கையை வாழ்வார்கள். பெரும்பாலும் இவர்கள் மற்றவர்களை விட ஒரு தனிப்பட்ட இலக்குகளை தங்களுக்கு தாங்களே உருவாக்குவார்கள்.
தொடர்ச்சி…
நடுத்தர குழந்தைகள் சுயநலவாதிகளாக இருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. இவர்களிடம் உள்ள விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையால், இவர்களது தோல்விகள் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதனாலேயே இவர்கள் எப்பேற்பட்ட கஷ்டத்தையும் சமாளிக்கும் சக்தியைக் கொண்டவர்களாக உள்ளார்கள்.
கடைக் குட்டி
கடைக் குட்டி
ஒரு குடும்பத்தில் கடைசியாக பிறக்கும் குழந்தை, அக்குடும்பத்தில் உள்ளோர் அனைவருக்கும் செல்ல பிள்ளையாகவும், அதிக அன்பும் அக்கறையும் காட்டப்படும் குழந்தையாகவும் இருப்பர். இந்த குழந்தைகள் தனித்து செயல்படுவதற்கு பல வருடங்கள் ஆகும். பெரும்பாலும் பெற்றோருடன் தான் இருப்பர். இவர்கள் தனது உடன்பிறப்புக்களை வி டதேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் சீக்கிரம் வெற்றி பெற வேண்டுமென நினைப்பார்கள். அதாவது இவர்கள் எதையும் வேகமாக செய்ய நினைப்பார்கள். இவர்களிடம் நிதானம் என்ற ஒன்று இருக்காது.
தொடர்ச்சி…
கடைசியாக பிறந்த குழந்தைகளின் சுய வெளிப்பாடு மிகவும் தனிப்பட்ட வழிகளில் தான் இருக்கும். இவர்கள் ஒரு சிறந்த கலைஞர்களாக இருப்பர். அதோடு, இவர்கள் சமூகத்துடன் நன்கு பழகக்கூடியவர்களாகவும், அதே சமயம் எதிலும் சற்று கவனக்குறைவுடனும் செயல்படுவர். இளைவராக இருப்பதால், இவர்கள் எல்லாவற்றையும் இழந்து விடுவதால், இதன் விளைவாக இவர்களிடம் கேடித்தனம் சற்று அதிகம் இருக்கும்.
ஒரே ஒரு குழந்தை
சில பெற்றோர்கள் ஒரே ஒரு குழந்தை போதும் என நினைப்பார்கள். ஆனால் உடன் பிறப்புக்களின்றி தனித்து இருக்கும் குழந்தைக்கு பெற்றோரின் முழுமையான அன்பும், பாசமும் கிடைக்கும். இவர்கள் ஒருவர் மீது பெற்றோர்கள் அதிக அக்கறை கொண்டிருப்பதால், எப்போதும் இவர்கள் மற்றவர்களை சார்ந்தே இருப்பார்கள். இவர்களுக்கு கிடைக்கும் அன்பும், பாசமும், கவனமும் தான் இவர்களை ஒரு சிறந்த மனிதராக்க உதவுகிறது.
தொடர்ச்சி
குடும்பத்தில் ஒரே ஒரு குழந்தையாக இருப்பவர்களுக்கு, போட்டி என்பது மிகவும் குறைவாக இருக்கும். மேலும் இவர்கள் எதையும் சரியாக செய்து முடிப்பவர்களாக இருப்பர். இவர்கள் தங்களை மையப்படுத்தியே இருப்பார்கள் மற்றும் இவர்களிடம் தொடர்பு கொள்வது என்பது கடினமான ஒன்றாக இருக்கும். மேலும் இவர்களுக்கு தாங்கள் பேசுவது தான் சரி என்ற எண்ணமும் இருக்கும். இவர்களிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை சற்று குறைவாகவே இருக்கும். இவர்கள் மீது பெற்றோர்கள் அதிக அன்பு கொண்டிருப்பதால், அதைப் பயன்படுத்தி தனக்கு வேண்டியதை அடம்பிடித்தாவது நிறைவேற்றிக் கொள்வார்கள்.