30.4 C
Chennai
Friday, May 30, 2025
Tamil News Bitter Gourd Soup Pavakkai Soup SECVPF
ஆரோக்கிய உணவு

கெட்ட கொழுப்பை நீக்கும் பிஞ்சு பாகற்காய் சூப்

தேவையான பொருட்கள்:

பிஞ்சு பாகற்காய் – 100 கிராம்,

மஞ்சள்தூள் – 2 சிட்டிகை,
மோர் – 2 டேபிள்ஸ்பூன்,
சின்ன வெங்காயம் – 6 ,
தக்காளி – 2 ,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்,
அரிசி கழுவிய தண்ணீர் – 200 மில்லி,
சோள மாவு (கார்ன் ஃப்ளார்) கரைசல் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன், தண்ணீர்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

சின்ன வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

பிஞ்சு பாகற்காயைச் சுத்தம்செய்து பொடியாக நறுக்கி மோர்விட்டு அரை மணி நேரம் கழித்து மோரிலிருந்து எடுத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிசைந்து 15 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி போட்டு வதக்கியபின் ஊறவைத்த பாகற்காயைச் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதில் அரிசி கழுவிய தண்ணீர், சோள மாவுக்கரைசல் சேர்த்து நன்கு வேகவைத்து மிளகுத்தூள் தூவி இறக்கவும்.

வடிகட்டி அல்லது அப்படியே பரிமாறவும்.

சத்து நிறைந்த பிஞ்சு பாகற்காய் சூப் ரெடி.

Courtesy: MalaiMalar

Related posts

வெண்டைக்காய் சாப்பிடுவதால் நடக்கும் எண்ணிலடங்காத நன்மைகள்

nathan

டயட்டில் இருக்கும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

nathan

இலங்கையில் ஐந்தே நிமிடத்தில் ரெடியாகும் ரொட்டி!

nathan

தெரிஞ்சிக்கங்க… பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பச்சை காய்கறிகள்!

nathan

அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விட…

sangika

பொரி சாப்பிட்டா இவ்வளவு பலன் இருக்கா?

nathan

ப‌ச்சை ‌மிளகாயை பாதுகா‌க்க

nathan

தெரிஞ்சிக்கங்க…தினமும் இதை 1கப் சாப்பிடுவதால் கிடைக்கும் ஏராள நன்மைகள்!

nathan

சுவையான சில்லி பிரட் உப்புமா

nathan