ஆரோக்கியம்தொப்பை குறைய

இடுப்பை ‘சிக்’கென்று வைத்துக்கொள்ள … (tamil beauty tips)

images (6)* காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

• பூசணிக்காய், வாழைத்தண்டு இவற்றுக்கெல்லாம் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு நாள் வாழைத் தண்டு சாறு, மறுநாள் பூசணிக்காய் சாறு என்று மாற்றி மாற்றி வெறும் வயிற்றில் அருந்தலாம்.

• நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.

• எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கலாம். வேக வைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம்.

• அதிக கலோரி உள்ள உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். நொறுக்குத் தீனி ஆசையைத் தடுக்க முடியாவிட்டால்… அவல், அரிசிப்பொரி, காய்கறி சாலட் சாப்பிடலாம்.

• சாப்பிட்டு முடித்தவுடன் 10 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீர் அருந்தலாம்.

• தினமும் உணவில் 2 டீஸ்பூன் ‘கொள்ளு’ சேர்ப்பது, உடலில் அதிக கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.

• டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது. இதனால், சாப்பாட்டின் அளவு தெரியாமல் போய்விடும்.

• தினமும் ஒரு சிறிய வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவது, ரத்தத்தில் தங்கியிருக்கும் கொழுப்பை சரிசெய்துவிடும்.

Related posts

கிருமி தொற்றால் வரும் பாதிப்புக்கு தேன்!

nathan

குழந்தைகளின் உணவு முறையில் கவனம் செலுத்துகின்றீர்களா?

nathan

முதுகு வலி குறைய…

nathan

தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் வேகமாக உடல் எடை குறைவதை உங்களால் உணர முடியும்….

sangika

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

மூக்கடைப்பு பிரச்சனையா?இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

தேன் மற்றும் வெதுவெதுப்பான தண்ணீரை பயன்படுத்தி எடை இழப்பதற்கான 4 எளிய வழிகள்

nathan

மிளகு உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்!…

sangika

சமையல் குறிப்பு டிப்ஸ்

nathan