rice1
ஆரோக்கிய உணவு

மூன்று வேளையும் சோறு சாப்பிடுபவரா? உங்களுக்குதான் இந்த விஷயம்

நம்முடைய உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு அரிசியில் உள்ள பல குணங்கள் உதவுகின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் தெரிவித்துள்ளார்.

அரிசி எம் தமிழரின் பாரம்பரிய உணவாகும். இன்று உடல் எடை அதிகரிக்கின்றது என்று பலர் அரிசி உணவுகளை தவிர்த்து வருகின்றனர்.

உண்மையில் அரிசியில் ஏராலமான நன்மைகள் கொட்டி கிடக்கின்றது.

அரிசி உணவால் நம்முடைய உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

 

அரிசி ஒரு ப்ரீபயாட்டிக் தானியம். அரிசி உணவுகள் என்பது நமக்கான உணவாக மட்டுமன்றி, உடலிலுள்ள நல்ல நுண்ணுயிரிகளுக்கும் உணவாக அமைகிறது.
அரிசியை காய்கறியுடன் சேர்த்து சமைத்து உண்ணும் போது உடலுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.
அரிசி உணவு சாப்பிடும் போது நமக்கு வயிறு நிறைய உணவு உண்ட தான ஒரு உணர்வை ஏற்படுத்தும். அடிக்கடி பசிக்கும் உணவு தோன்றாது. எனவே நாம் கூடுதலாக நொறுக்குத்தீனிகள் அல்லது தின்பண்டங்கள் உண்ணுவதை தவிர்க்க வாய்ப்புள்ளது.
அரிசியை நாம் பலவகையில் சமைக்கலாம். அரிசி சோறு என்பதைத் தவிர்த்து பாலீஷ் செய்யப்படாத அரிசியில் பி வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. எல்லா வயதினருக்கும் அரிசி சாதம் மிகவும் எளிதாக செரிமானமாகும்.
குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் எந்தவித தீங்கையும் அரிசி உணவு ஏற்படுத்தாது .
மீந்த அரிசி சோற்றில் தண்ணீர் ஊற்றி அடுத்த நாள் காலையில் ஒன்பது மிகவும் சத்து நிறைந்தது சமீபத்தில் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் இந்த பழைய சோற்றில் கிடைக்கிறது.
அரிசி களைந்த நீரை தலைக்கு இயற்கையான வைட்டமின் பி நிறைந்த கண்டிஷனராக பயன்படுத்தலாம்.
நமக்கு மட்டுமல்லாமல், நெல் விதைப்பது முதல், அரிசியாக சந்தைப்படுத்துவது வரையில், கிடைக்கும் தவிடு, வைக்கோல், என ஒவ்வொரு பொருளும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது.
நெல் சாகுபடி செய்யும் போது, நிலத்தடி நீரை மொத்தமாக உறிஞ்சாமல் தேவையான அளவு ஈரப்பதத்தையும், ஒத்த பருவ காலங்களில் விதைக்கப்படும் தானியங்கள் அல்லது காய்கறிகளுக்கு தேவையான இயற்கையான நைட்ரஜன் உள்ளிட்ட சத்துக்களையும் விட்டுச்செல்லும்.
எனவே ஆரோக்கியமான வாழ்க்கை சோறு மிகவும் முக்கியம். தினமும் அளவாக சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

 

Related posts

இரத்த நாளங்களில் தேங்கியிருக்கும் தீயக் கொழுப்பை நீக்க உதவும் சிறந்த உணவுகள்!!!

nathan

செவ்வாழை தீமைகள்

nathan

ஹார்மோன் பிரச்சனைகளை சரிசெய்யும் உணவுகள்!

nathan

மாதுளையின்ஆரோக்கிய நன்மைகள்! இதை சாப்பிடாமல் இருக்கக்கூடாது!

nathan

சூப்பரான மசாலா மோர்

nathan

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆரோக்கிய குறிப்புகள்!!!

nathan

தெரிந்துகொள்வோமா? எந்நெந்த சூப்புகள் குடித்தால் உடல் எடை குறையும் தெரியுமா?

nathan

கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.

sangika

அஜீரணம், நெஞ்செரிச்சலை குணமாக்கும் மோர்

nathan