photo
சமையல் குறிப்புகள்

சுவையான சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொரியல்

தேவையான பொருட்கள்:

சர்க்கரைவள்ளிக்கிழங்கு – 100 கிராம்,

பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
கடுகு – ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

சர்க்கரைவள்ளிக்கிழங்கைத் தோல் சீவி மீடியமான துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து குழையாமல் வேக வைத்து கொள்ளவும்.

பாசிப்பருப்பையும் குழையாமல் தனியாக வேக வைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு போட்டு சிறிது வெடித்ததும் மிளகாயைக் கிள்ளிப் போட்டு வேகவைத்த சர்க்கரைவள்ளிக் கிழங்கையும் தண்ணீர் வடித்துப் போட்டு, வேகவைத்த பாசிப்பருப்பையும் சேர்க்கவும்.

இதனுடன் தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

சூப்பரான சர்க்கரைவள்ளிக்கிழங்குப் பொரியல் ரெடி.

Related posts

டிப்ஸ்… டிப்ஸ்…

nathan

காரசாரமான… சில்லி ராஜ்மா

nathan

சுவையான தக்காளி பாஸ்தா

nathan

சுவையான தேங்காய்பால் தக்காளி சாதம் – சுவையாக செய்வது எப்படி?

nathan

கிளப் சாண்ட்விச் பரோட்டா சாப்பிட்டதுண்டா? இன்றே செய்து சாப்பிட்டு பாருங்கள்…

sangika

சுவையான காலிஃப்ளவர் மசாலா தோசை

nathan

சுவையான கோடி வேப்புடு: ஆந்திரா ரெசிபி

nathan

தயிர் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

nathan

ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு

nathan