29.9 C
Chennai
Monday, Sep 22, 2025
21 61399
மருத்துவ குறிப்பு

இன்றைய காலத்தில் மங்கையரை வருத்தும் மாதவிடாய் பிரச்சினை

மங்கயைரை வருத்தும் மாத பிரச்சினை தொடர்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகரில்உள்ள வி.ஜி.கே. மருத்துவமனை பெண்கள் நல சிறப்பு மருத்துவர் ஜெ.அனுஜா கூறியதாவது:-

இன்றைய காலத்தில் பெண்கள் பலர் மாதவிடாய் பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதில் மாதவிடாய் மாதமாதம் வருவதில்லை. அதிக போக்கு பிரச்சினைகள் வருகின்றன. இதற்கு முக்கிய காரணங்கள் என்னவென்றால் தைராய்டு, ரத்தசோகை, கருப்பை, நீர்க்கட்டி, என்டோ மேட்ரியோசிஸ் ஆகும்.

இதில் பல பெண்கள் நீர் கட்டி பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். குறிப்பாக 60 சதவிகித பெண்கள் இப்பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 18 முதல் 45 வயது உள்ள இனப்பெருக்க பிரிவை சார்ந்த பெண்களிடையே பெண் சினைப்பை நோய்குறி கோளாறு ஏற்படுகிறது. சினைப்பை நோய்குறி (நீர்க்கட்டி) என்பது சினைப்பையில் இருக்கும் முட்டைகள் போதுமான வளர்ச்சி இல்லாமல் சினைப்பையை சுற்றி நீர் கொப்புளங்கள் போல உருவாகும் நிலையை குறிக்கும்.

இதனை விளக்கமாக கூறுகையில், ஒவ்வொரு சினைப்பையில் கோடிக்கணக்கான முட்டைகள் இருக்கின்றன. இவற்றில் ஒரு முட்டை மட்டுமே முழு வளர்ச்சி அடைந்து தன்னை உடைத்து கொண்டு வெளி வரும்போதுதான் விந்துகளோடு இணையும். மீதம் இருக்கும் அத்தனை முட்டைகளும் அழிந்து மறைந்து போகின்றன. இது ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற மாதவிடாய் சுழற்சி ஆகும்.

ஆனால் பாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ட்ரோம் (நீர்க்கட்டி). இதில் என்ன நடக்கும் என்றால் கரு முட்டைகள் ஒன்று கூட முழு வளர்ச்சி அடைந்து உடைந்து வெளிவருவதில்லை. அந்த முட்டைகள் அழிவதும் இல்லை. அவற்றை சுற்றி சேர்ந்து கொண்டு நீர் கொப்புளங்களாக முட்டைபையை சுற்றி ஆக்கிரமித்து கொள்கின்றன.

இந்த நோய்க்கான அறிகுறிகள் என்னவென்றால் ஒழுங்கற்ற மாதவிடாய், முகம் மற்றும் மார்பில் மிகையாக வளர்ந்து இருந்தல், எடை அதிகரிப்பு, முடிஉதிர்தல், முகப்பரு, என்னை வடியும் முகம், இந்த நோயின் விளைவாக குழந்தையின்மை, இதயநோய், நீரழிவு நோய், உயர் கொழுப்பு, உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இந்த நோயில் இருந்து விடைபெற நாம் சரியான உணவு முறை, உடற்பயிற்சி, மன அழுத்தம், சரியான வாழ்க்கை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த நோயில் இருந்து விடுபட ஓமியோபதி மருத்துவத்தில் சிறந்த மருந்துகள் இருக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Courtesy: MalaiMalar

Related posts

படர்தாமரையை போக்கும் பூண்டு

nathan

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை எதனால் உண்டாகிறது? எப்படி தவிர்ப்பது? என்ன சிகிச்சை?

sangika

முடி வேண்டுமா… உயிர் வேண்டுமா?

nathan

உடலுறவு கொள்ளும் போது ஏன் வலிக்கிறது என்று தெரியுமா?

nathan

தலை பாரத்திற்க்கான சித்த மருந்து

nathan

கழுத்து வலியை குணமாக்கும் கைவைத்தியங்கள் சூப்பரா பலன் தரும்!!!

nathan

சளித்தொல்லையில் இருந்து விடுபட அருமையான வைத்தியம்!

nathan

இரத்த வெள்ளையணுக்களை அதிகரிக்க வேண்டுமா? அளவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்கள்

nathan

இதோ சில டிப்ஸ்… உங்க குழந்தை படுக்கையில் ‘சுச்சு’ போவதைத் தடுக்கணுமா?

nathan