26.7 C
Chennai
Wednesday, Nov 20, 2024
Tamil News tamil news Rose Gold Jewelry SECVPF
ஆரோக்கியம் குறிப்புகள்

தைரியத்தை மேம்படுத்தும் ஆபரணங்கள்…தெரிஞ்சிக்கங்க…

ரத்தினங்களில் தங்களுக்கென்று தனித்துவமான இடத்தைப் பிடித்திருப்பவை முத்துக்களும், பவளங்களும் என்று சொல்லலாம். முத்துக்களிலும், பவளங்களிலும் ஏராளமான வகைகளும், எண்ணற்ற வண்ணங்களும் உள்ளன. முத்து நகைகள், பவள நகைகள் என்று தனித்தனியாகவும், முத்தும், பவளமும் இணைந்த நகைகளாகவும் மக்களிடம் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றிருக்கின்றன.

வெள்ளை நிறத்திலிருக்கும் முத்துக்களோடு சிவப்பு நிறத்திலிருக்கும் பவளத்தை சேர்த்து செய்யப்படும் நகைகளின் அழகை என்னவென்று வர்ணிப்பது? பாரம்பரியமான நகைகள் முதல் இன்று நடைமுறையில் அணியக்கூடிய டிரெண்டிங் நகைகள் வரை அனைத்திலும் முத்து, பவள இணைப்பு நகைகள் அருமையாக வந்துள்ளன.

சிறு சிறு முத்துக்களை ஒரு விரல் நீளத்திற்குக் கொத்தாகக் கோர்த்து வைத்திருக்க அதனைத் தொடர்ந்து ஒரு விரல் நீளத்திற்கு சிறிய பவள மணிகள் கொத்தாகக் கோர்க்கப்பட்டு இருப்பது போல் வந்திருக்கும் கழுத்து நெக்லஸ்களின் மாடலானது மிகவும் நேர்த்தியாக உள்ளது. இதே முத்து, பவள சிறு மணிகளைக் கொண்டு காதுத் தொங்கலும் ஜோடியாக கிடைக்கின்றன. இவற்றை சுடிதார் செட்டுகளுடன் அணியும் பொழுது நாகரீகமான தோற்றத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

பெரிய முத்துக்களிலிருந்து சிறிய முத்துக்கள் அதனிடையே பெரிய பவளத்திலிருந்து சிறிய பவளம் என இருபுறமும் தங்கப் பூண்களுடன் கோர்க்கப்பட்டு வருபவையும், வட்டக் கழுத்து டாப்புகளுடன் அணியும் பொழுது மிகவும் ஸ்டைலான தோற்றத்தைத் தரும். இத்துடன் ஒரே ஒரு பெரிய முத்தோ அல்லது ஒரே ஒரு பவளமோ வைத்து அதனைச் சுற்றி மெல்லிய தங்கக் கம்பி போல் வரும் காதணிகள் இளம் பெண்களும் அணியக்கூடியவைகளாக உள்ளன.

தங்க அட்டிகையில் பச்சை, சிவப்பு கற்கள் பதித்திருக்க அதன் கீழே பவள மணி தங்கத்தினால் செய்த மணி மற்றும் முத்து மணி என அடுத்தடுத்து தொங்குவது போல் வரும் அட்டிகையும், புடவை மற்றும் சுடிதார்களுக்கு மட்டுமல்லாமல் லெஹங்காக்களுக்கும் அணியும் விதமாக உள்ளன.

மூன்று சரங்களில் குறுக்கு வாக்கில் பவளமணி மூன்று அடுத்து குறுக்கு வாக்கில் பவளமணி மூன்று என்று இருக்க அதன் நடுவில் முத்தும் பவளமும் வைத்த பதக்கம், அதற்கு ஏற்ற டிசைனில் முத்து பவளத் தொங்கல் பட்டுச் சேலைகளுடன் அணிய இந்த நகையானது மிகவும் பொருத்தமாக இருக்கும்.

பெரிய பவளத்துடன் அதை விடச் சிறிய அளவிலிருக்கும் முத்துகளையும் தங்கத்தினால் செய்யப்படும் டிசைன் குண்டுகளையும் கோர்த்து செய்யப்படும் நீளமான மாலைகளுக்கு வெள்ளை வைரக் கற்கள் பதித்த டாலரின் கீழே முத்துக்கள் தொங்குவது போல் செய்யப்படும் நகைகள் நடுத்தர வயதுப்பெண்கள் மட்டுமல்லாது வயதான பெண்களும் வைரக் கம்மலுடன் அணிய ஏற்றவையாக உள்ளன.

நடுத்தரமான பவள மணிகள் மற்றும் அதைவிடச் சிறிய முத்து மணிகள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்கச்சங்கிலியில் கோர்க்கப்பட்டிருக்க, இரண்டு அன்னங்கள் தங்கத்தினால் செய்யப்பட்டு எதிரெதிரே இருக்க நடுவே பெரிய மரகதக்கல். அதனைச்சுற்றிலும் சிறிய வைரக்கற்கள் பதிக்கப்பட்டிருக்கும் டாலரின் கீழே நீள வடிவிலான பவள மணிகள் தொங்குவது போலிருக்கும் செயினானது பாவாடைத் தாவணி, புடவை மற்றும் சுடிதார்களுடனும் அணியக்கூடியது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டாலர் செயினானது பழமையில் புதுமையை நினைவூட்டுகின்றது.

ரோஜா மலர் போன்றிருக்கும் பவளத்துடன் முத்துக்கள் பதித்து செய்யப்படும் நெக்லஸ்களும் அருமையோ அருமை என்று சொல்லுமளவுக்கு உள்ளன.

ரோஜா மொட்டுகள் போன்று குவிந்து வரும் பவளத்துடன் நீளவாக்கிலிருக்கும் முத்துக்களைக் கோர்த்து செய்யப்படும் ஒற்றைச்சார மாலைகள் அனைத்து வயதினரும் விரும்பக்கூடிய ஒன்றாக உள்ளது.

முத்தும், பவளமும் சேர்த்து செய்யப்படும் காதணிகளும், தொங்கட்டான்களும், ஜிமிக்கிகளும் கல்லூரி செல்லும் பெண்களால் பெரிதும் விரும்பக்கூடிய வகையில் டிரெண்டியாக வடிவமைக்கப்பட்டு வந்துள்ளன.

குளிர்ச்சி தன்மையை உடையது முத்து. வெப்ப தன்மையை உடையது சிவப்பு நிறமுடைய பவளம். அதேபோல் சிவப்பு நிறமுடைய பவளம் தைரியத்தையும், வலிமையையும் மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் முத்து மனதில் சமநிலையை அளிக்கிறது. எனவே, இந்த இரண்டும் சேர்ந்த நகைகளை ஒரே நேரத்தில் அணிவது மிகவும் நன்மை பயக்கும்.

Courtesy: MalaiMalar

Related posts

அடம்பிடிச்சு அழற குழந்தைய இப்டி தான் சமாளிக்கணும்! சில யோசனைகள்.

nathan

உடல் சூட்டை தணிக்கும் இயற்கை வழிகள்

nathan

சைக்கிள் ஓட்டும்போது நாம் செய்யும் தவறுகள்!

nathan

பெண்கள் மாதவிடாயின்போது குளிக்கக்கூடாது ?

nathan

தெரிஞ்சிக்கங்க…வெறும் தரையில் படுத்து தூங்குபவரா நீங்கள்? மனதுக்கும் ஏற்படும் நன்மைகள் இவைதான்

nathan

நம் வாழ்க்கையில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாத 6 கெட்ட பழக்கங்கள்!!தெரிந்துகொள்வோமா?

nathan

இவ்வளவு நன்மைகளா? கொலுசு அணியும் பெண்களே…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… தம்பதியிடையே சண்டை வராமலிருக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து முறை!

nathan

நாம் அனைவரும் இக்கணமே தவிர்க்க வேண்டிய 8 பழக்கங்கள்..!

nathan