Tamil News Tamil news Kali Ulutham Kali SECVPF
ஆரோக்கிய உணவு

சுவையான கருப்புக்கவுனி அரிசி களி

கவுனி அரிசியில் உள்ள நார்ச்சத்து, உணவுக்குப்பின் ரத்தச் சர்க்கரை உயராமல், சீராக இருக்க உதவுகிறது. மலச்சிக்கல், செரிமானப் பிரச்னைகள், வாய்வு, வயிற்று வீக்கம், வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கும் இந்த அரிசி மிகச்சிறந்த தீர்வாக இருக்கிறது. கவுனி அரிசியில் வைட்டமின் இ உள்ளதால் கண் மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு நல்லது. தவிர நோய் எதிர்ப்பு சக்தியும் நிறைந்தது.

தேவையான பொருட்கள் :

கருப்புக்கவுனி அரிசி மாவு – 1 கப்.
உளுந்துமாவு – 1 கப்.
நெய் – 1 கப்.
பனைவெல்லம் – 1 கப்.

செய்முறை:

கருப்புக்கவுனி அரிசி மாவு, உளுந்துமாவு இரண்டையும் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பனைவெல்லத்தை 500 மில்லி லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து பாகு ஆக்க வேண்டும்.

பின்பு அதில் மாவு வகைகளை கொட்டி, கெட்டியாகாமல் கிளற வேண்டும். நன்கு வெந்ததும் நெய் விட்டு, கிளறி இறக்க வேண்டும்.

சத்தான சுவையான கருப்புக்கவுனி களி ரெடி.

Related posts

கொழுப்பை கரைக்கும் பழங்கள்

nathan

சர்க்கரை வியாதி, கர்ப்பப்பைக் கோளாறுகளை நீக்கும் இலந்தைப் பழம்!! எப்படி சாப்பிடனும் தெரியுமா?

nathan

சூப்பரான வெண்டைக்காய் பெப்பர் பிரை.! இன்றே செய்து பாருங்கள்..!

nathan

water apple in tamil – வாட்டர் ஆப்பிள் பழம்

nathan

காலையில் ஒரு துண்டு இஞ்சி உண்ணுவதால் ஏற்படும் நன்மைகள்

nathan

தெரிஞ்சிக்கங்க…சர்க்கரை நோயாளிகள் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

nathan

வேப்பம்பூ சாதம் செய்வது எப்படி?

nathan

வெறும் வயிற்றில் ஊறவைத்த வேர்க்கடலை! இவ்வளவு ஆபத்தும் இருக்கின்றதா?

nathan

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?

nathan