Tamil News Carrot Thogayal SECVPF
ஆரோக்கிய உணவு

கேரட் துவையல்- 10 நிமிடத்தில் ருசியாக செய்வது எப்படி?

கேரட் ஆனது பலருக்கும் மிகவும் பிடித்த காய்கறியில் ஒன்று. இதை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவதையே பலரும் விரும்புவார்கள்.

கேரட்டில் கேரட் பச்சடி, கேரட் தோசை, கேரட் இல்லாத உணவுகளே இல்லை எனும் அளவிற்கு அனைத்து சமையலிலும் கேரட் சேர்த்தால் கூடுதல் சுவையுடன் இருக்கும்.

அந்த வகையில், சுவையான கேரட் துவையல் ருசியாக செய்வது எப்படி என்பதை பற்றி பார்ப்போம்….

தேவையான பொருட்கள்

கேரட் – 1 கப் ( துருவியது )

கடலைப்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,

உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்,

காய்ந்தமிளகாய் – 4,

புளி – பாக்கு அளவு,

பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை,

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

நறுக்கிய இஞ்சி – சிறிதளவு

செய்முறை விளக்கம்

முதலில், கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும், அதில், கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து வறுத்து கொள்ளவும்.

அதனுடன் கேரட் துருவலை சேர்த்துக்கு வதக்கி கொள்ளவும். இஞ்சி, புளி சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலந்து வதக்கி கொள்ளவும்.

வதக்கிய கேரட் கலவை நன்றாக ஆறிய பிறகு, மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். இப்போது சுவையான கேரட் துவையல் தயார்.

Related posts

ஆரோக்கியமான, சத்தான கீரை உப்புமா

nathan

சூப்பரான கேரட் சப்பாத்தி!

nathan

அவசியம் படிக்க..கேன்சர் வராமல் இருக்க இந்த உணவுகளை உண்ணாதீர்!

nathan

நெல்லிக்காயின் பலன்கள் சொல்லித் தெரிவதில்லை!

nathan

இந்த பிரச்சனை இருக்குறவங்க முந்திரியை அறவே தொட கூட வேண்டாம்!

nathan

கல்சியம் சத்து குறைபாடா? அப்ப இத படிங்க!

nathan

உங்களுக்கு தெரியுமா இஞ்சியில் ஒழிந்திருக்கும் அற்புத மருத்துவ குணங்கள்..!

nathan

சூப்பர் ஸ்லிம் ஃபுட்ஸ் 8

nathan

சத்தான ஓட்ஸ் கட்லெட் செய்முறை விளக்கம்

nathan