ஆரோக்கிய உணவு

ஊட்டச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி உங்களுக்கு தெரியுமா!!! தெரிஞ்சிக்கங்க…

அறுசுவை உணவையும் ரசித்து ருசித்த கலாசாரம் நம்முடையது. இன்றோ, உப்பு சப்பு இல்லாத, வேந்தும் வேகாத அரை வேக்காடு உணவுகளை தேடி சென்றுக் கொண்டிருக்கிறோம். உணவு என்பது வயிற்றை நிரப்புவதற்கான செயல்பாடு அல்ல உங்கள் ஆரோக்கியத்தையும், உடல்திறனையும் நிரப்புவதற்கான செயல்பாடு என்பதனை முதலில் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

 

உங்கள் உடலிற்கு ஏதாவது உடல்நல கோளாறு அல்லது பிரச்சனை ஏற்படும் போது மருத்துவர் தரும் மருந்துகளில் இருப்பது ஊட்டச்சத்து தான். அதை நீங்கள் சரியாக உணவின் மூலமாக எடுத்துக் கொண்டால் அந்த உடல்நல பிரச்சனைகளும், கோளாறுகளும் ஏற்படுவதை தவிர்த்துவிடலாம்.

 

முதலில் நீங்கள் எந்தெந்த ஊட்டச்சத்து உங்களுடைய உடலுக்கு எந்த முறையில் பயன் தருகிறது மற்றும் அதன் குறைபாடினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்னென்ன என்று அறிந்துக் கொள்ள வேண்டும். அதற்கேற்ப உங்கள் உணவு முறையை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். இனி, ஊட்டச்சத்து பற்றாக் குறையினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் பற்றி பார்க்கலாம்…

முளைக்கட்டிய பயிர்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

ஃபோலிக் அமிலம்

ஃபோலிக் அமிலத்தின் குறைபாடினால் இரத்த சோகை மற்றும் நரம்பு குழாய் குறைபாடுகள் ஏற்படுகின்றன. கீரை, தானியங்கள், ரொட்டி, மற்றும் உறுப்பு இறைச்சி (குடல், ஈரல் ) போன்ற உணவுகளில் ஃபோலிக் அமிலத்தின் சத்துகள் நிறைவே கிடைக்கும்.

இரும்புச்சத்து

இரத்த சோகை, கடை வாய்ப்புண், ஈரல் நோய், நீரிழிவு நோய், தோல் நிறமூட்டல் போன்ற பிரச்சனைகள் இரும்புச்சத்தின் குறைபாடினால் ஏற்படுகிறது. பருப்பு, தானியங்கள், பீன்ஸ், சோயா மற்றும் பால் உணவுகளில் இரும்புச்சத்து நிறைய கிடைக்கிறது.

துத்துநாகம் (Zinc)

பாலியல், இனப்பெருக்க இயக்கக்குறை, நியூட்ரோபீனியா, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற குறைபாடுகள் துத்துநாக சத்தின் குறைபாடினால் ஏற்படுகின்றன. இறைச்சி, தானியங்கள் போன்ற உணவுகளில் துத்துநாக சத்து அதிகமாக கிடைக்கிறது.

வைட்டமின் பி3

வைட்டமின் பி3 யின் குறைபாடினால் தோல், நாக்கு, நரம்பியல் பிறழ்ச்சி, இரைப்பை கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பருப்பு, தானியங்கள், ஈரல், மீன் போன்ற உணவுகளில் வைட்டமின் பி3 யின் சத்து கிடைக்கும்.

வைட்டமின் பி2

கடை வாய்ப்புண், காட்டுவாயழல் மற்றும் வாய் சார்ந்த பிரச்சனைகள் வைட்டமின் பி2 வின் குறைபாடினால் ஏற்படுகிறது. தானியங்கள், பால், சீஸ், முட்டை , இறைச்சி போன்றவற்றில் வைட்டமின் பி2 வின் சத்து நிறைய கிடைக்கும்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

வைட்டமின் பி1

புற நரம்புக் கோளாறு, இதய செயலிழப்பு மற்றும் மூளை சார்ந்த கோளாறுகள் வைட்டமின் பி1 குறைபாடினால் ஏற்படுகிறது. உருளைக் கிழங்கு, இறைச்சி, தானியம், நட்ஸ் போன்ற உணவுகளில் வைட்டமின் பி1 னின் ஊட்டச்சத்து நிறைய கிடைக்கும்.

வைட்டமின் ஏ

மாலைக்கண் நோய், தலைவலி, தோல் உரித்தல், எலும்பு தடித்தல், மண்டையக இரத்த அழுத்தம், வீக்கம் போன்ற உடல்நல கோளாறுகள் வைட்டமின் ஏ வின் குறைபாடினால் ஏற்படுகின்றன. ஆரஞ்சு, முட்டை, பால் உணவுகள், இறைச்சி, கேரட் மற்றும் பச்சை காய்கறிகளில் வைட்டமின் ஏ வின் சத்து மிகுதியாக கிடைக்கும்.

வைட்டமின் பி6

வலிப்புத்தாக்கங்கள், இரத்த சோகை, நியூரோபதிகளுக்கு, ஊறல் தோலழற்சி மற்றும் புற நரம்புக் கோளாறுகள் வைட்டமின் பி6 ஊட்டச்சத்தின் குறைபாடினால் ஏற்படுகின்றன. பருப்பு, தானியம், உறுப்பு இறைச்சிகள் மற்றும் மீன் போன்ற உணவுகளில் வைட்டமின் பி6-இன் சத்து அதிகமாக கிடைக்கும்.

வைட்டமின் சி

சரும நோய், இரத்தப்போக்கு, தளர்வான பற்கள், ஈறு மற்றும் எலும்பு பிரச்சனைகள் வைட்டமின் பி12-இன் குறைபாடினால் ஏற்படுகின்றன. தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற உணவுகளில் வைட்டமின் பி12 -இன் சத்து நிறையவே கிடைக்கும்.

வைட்டமின் பி12

மெகாலோ ப்ளாஸ்டிக் அனீமியா, நரம்பியல் கோளாறுகள் (குழப்பம்), அசாதாரணத் தோல் அழற்சி, தள்ளாட்டம் போன்ற பாதிப்புகள் வைட்டமின் பி12- இன் பற்றாக்குறையினால் ஏற்படுகின்றன. உறுப்பு இறைச்சிகள், பால் உணவுகள், முட்டை, தானியங்கள் போன்ற உணவுகளில் வைட்டமின் பி12 சத்து கிடைக்கும்.

வைட்டமின் டி

வலிப்பு, எலும்பு மெலிவு, ரத்த சுண்ணம், பசியின்மை, சிறுநீரக செயலிழப்பு, புற்று நோய் போன்ற உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மீன் மற்றும் பால் உணவுகளில் வைட்டமின் டியின் சத்து அதிகமாக கிடைக்கும்.

வைட்டமின் ஈ

சிவப்பு இரத்த செல்களில் வலுவிழப்பு, நரம்பியல் பிரச்சனைகள், மற்றும் இரத்த போக்கு அதிகரிப்பு போன்ற உடல்நல பிரச்சனைகள் வைட்டமின் ஈ சத்தின் குறைபாடினால் ஏற்படுகின்றன. காய்கறி, மற்றும் நட்ஸ் உணவுகளில் வைட்டமின் ஈ யின் ஊட்டச்சத்து நிறைய கிடைக்கும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button