ஆரோக்கிய உணவு

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…கிரீன் டீ குடிக்கலாமா..?

ஆண்கள் கிரீன் டீயை குடிப்பதால் புற்றுநோய் முதல் பிறப்புறுப்பு பிரச்சினைகள் வரை பலவித வழிகளில் இது உதவும் என ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

இன்று நாம் எப்படி கிரீன் டீ ஆண்களை பலவித நோய்களில் இருந்து காக்கிறது என்று இனி அறிவோம்.

ஆண்களின் பிரச்சினை

ஆண்களின் பெரிய பிரச்சினையாக இந்த மலட்டு தன்மை பார்க்கப்படுகிறது. பலர் தாம்பத்திய வாழ்வில் இந்த மலட்டு தன்மை பிரச்சினை மிக மோசமான விளைவை ஏற்படுத்தி உள்ளது. மலட்டு தன்மையை தடுக்க இந்த கிரீன் டீ உதவும் என சில ஆய்வுகள் சொல்கிறது.

பிறப்புறுப்பு புற்றுநோயை குணப்படுத்த

கிரீன் டீ குடித்து வரும் ஆண்களுக்கு பிறப்புறுப்பு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். உடலில் புற்றுநோய் செல்கள் வளர விடாத அளவிற்கு இவை எதிர்ப்பு சக்தியை பன்மடங்காக கூட்டி விடுமாம்.

அழுக்குகளை சுத்தம் செய்ய

ஆண்களின் உடல் முழுவதும் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்ய இந்த கிரீன் டீ ஒரு அற்புத மருந்தாக வேலை செய்கிறது. 5,000 வருடத்திற்கு முன்பு இருந்தே ஆசிய நாடுகளில் உடலில் சேர்ந்துள்ள அழுக்குகளை சுத்தம் செய்வதற்காக இதனை பயன்படுத்தி வருகின்றனர்.

இளமையான தோற்றத்திற்கு

ஆண்களே, நீங்கள் சீக்கிரமாகவே முதுமையான தோற்றத்தை அடைந்து விடுகிண்றீர்கள் என்றால் உங்களுக்கான தீர்வு கிரீன் டீ தான். செல்கள் சிதைவடைவதை தடுத்து வயதாகாமல் தடுக்கிறது. மேலும், முகத்தின் பொலிவையும் இது இரட்டிப்பாக செய்கிறது.

கொழுப்புக்களை கரைக்க

அளவுக்கு அதிகமான கொழுப்பு உணவுகளை சாப்பிட்டு விட்டு உடல் பருமன் கூடி விட்டதா..? இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது கிரீன் டீ. கிரீன் டீயை பற்றிய ஆராய்ச்சியில், தினமும் கிரீன் டீயை குடிக்கும் ஆண்களின் உடலில் சேர்ந்துள்ள கொழுப்புகள் கரைந்து விடுமாம். எனவே உடல் எடையை இது வேகமாக குறைக்க வழி செய்யும்.

Related posts

உடலில் நோய்கள் தாக்குவதைத் தடுக்கும் பச்சை பயறு புட்டு

nathan

உங்களுக்கு தெரியுமா கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்க இந்த இரண்டு பொருட்களே போதும்!

nathan

வாய்க்கு ருசி… உடலுக்கு சக்தி! வாசகிகள் கைமணம்!! சோள கொழுக்கட்டை & கீரைப் பொங்கல்!! ~ பெட்டகம்

nathan

கோடைக்கு ஏற்ற கீரைகள்!

nathan

கருவாடு சாப்பிடுவது நல்லது தானாம்; தெரிஞ்சிக்கங்க…

nathan

தினமும் ஒரு டம்ளர் ஓட்ஸ் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள்!தெரிந்துகொள்வோமா?

nathan

சூப்பரான ரோஸ் மில்க் செய்வது எப்படி..!

nathan

நான்ஸ்டிக் பொருட்களினால் பெண்களுக்கு பாதிப்பு

nathan

சர்க்கரை நோயாளிகள் காலை எழுந்தவுடன் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னென்ன?தெரிந்துகொள்வோமா?

nathan