இஞ்சி காரமான சுவையுடையது. இதனை தேநீருடன் சேர்த்து குடிப்பது மிகவும் நல்லது.
அதிலும், காலை வேளையில் இஞ்சி கலந்த டீ குடிப்பது, காய்ச்சலுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யவும், ஆரோக்கியமாகவும் இருக்க உதவும்.
ஒற்றைத் தலைவலியைப் போக்க
பொதுவாகவே தலைவலியைப் போக்க நாம் எல்லோரும் முதலில் டீ தான் அருந்துவோம். அதிலும் இஞ்சி கலந்த டீயை அருந்துவது, எந்த மருந்து எடுத்துக் கொண்டாலும் தீராத வலியைக் கொடுக்கும் ஒற்றைத் தலைவலியைப் போக்கும் வலிமை கொண்டது. தலைவலியைப் போக்கி உங்களை சுறுசுறுப்பாகவும் மாற்ற இஞ்சி கலந்த டீயை எடுத்துக் கொள்ளலாம்.
மூட்டுவலியைப் போக்க
பல வயதான பெரியோர்களை வேதனைக்குள்ளாக்கும் வலி எது எனில் அது மூட்டு வலி தான். மூட்டு வலியைப் போக்க பல மருந்துகளை உங்களது மருத்துவர் பரிந்துரைத்தாலும், நீங்கள் சாப்பிடும் உணவில் இஞ்சியை சேர்த்துக் கொள்வதன் மூலம் மூட்டு வலியைப் போக்க முடியும். அதுமட்டுமின்றி, இஞ்சி மூட்டு வலியைப் போக்கும் நிவாரணியாகவும் செயல்படும்.
மாதவிடாய் வலியைப் போக்க
மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியைப் போக்க பல மருந்துகள் உள்ளன. அவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை எனில், இஞ்சியை முயற்சி செய்து பாருங்கள். இஞ்சி தசைப் பிடிப்பைக் குறைக்க உதவும். அதோடு, மாதவிடாய் காலத்தில் உங்களை நன்றாக உணரச் செய்யவும் உதவும்.
நீரிழிவு நோயைத் தடுக்க
ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் ஏற்படும் நீரிழிவு நோயைத் தடுக்க நீங்கள் இஞ்சியை உபயோகிக்கலாம். நீரிழிவு நோயைத் தடுக்கவும், நீரிழிவு நோயின் ஆபத்துகளை குறைக்கவும் இஞ்சி உதவுகிறது.