அனைவராலும் விரும்பி சாப்பிடப்பிடப்படும் உணவாக தோசை உள்ளது என கூறினால் அது மிகையாகாது! அரிசி மாவு தோசை மட்டுமின்றி கம்பு, கேழ்வரகு இவ்வாறு வகை வகையான தோசையை சாப்பிட்டால் உடலுக்கு மிக நல்லது.
நமது உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் சத்து தோசையில் அதிக அளவு உள்ளது. எனவே, தோசையை நாம் தினந்தோறும் சாப்பிடும் போது நமது உடலுக்கு போதுமான அளவு கார்போஹைட்ரேட் சத்து கிடைக்கிறது.
தோசையை அதிகமாக சாப்பிடுவதனால் விட்டமின் மற்றும் மினரல்ஸ் அதிகமாக கிடைக்கிறது. தோசையோடு சாம்பார் சேர்த்து சாப்படுவதனால் புரோட்டீன் சத்தும் கிடைக்கிறது.
தோசையை காலை உணவாக எடுத்துக் கொண்டால் இதயத்திற்கு நல்லது.
சிலருக்கு கேழ்வரகு மற்றும் கம்பு ஆகியனவற்றை சாப்பிடப் பிடிக்காது. அப்படிபட்டோருக்கு தோசையாக கொடுத்தால் சாப்பிடுவர். எனவே, தோசையின் மூலம் கேழ்வரகு மற்றும் கம்பில் உள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கிறது.
வேக வைத்த முட்டையை சாப்பிட சிலருக்கு பிடிக்காது. எனவே, முட்டையை தோசையின் மீது ஊற்றி முட்டை தோசையாகக் கொடுக்கலாம். இதன் மூலம் முட்டையில் உள்ள புரோட்டீன் சத்து கிடைக்கிறது.
முக்கிய குறிப்பு
தோசையில் அதிக அளவு எண்ணெய் ஊற்றுவதை தவிர்க்க வேண்டும்.
எண்ணெய்யை அதிகமாக பயன்படுத்தினால் இதயத்திற்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
சர்க்கரை நோய் இருப்பவர்கள் அரிசி மாவு தோசைக்கு பதிலாக கேழ்வரகு மற்றும் கம்பு தோசையை சாப்பிட்டால் நோயைக் கட்டுப்படுத்தும்.