சர்க்கரைக்கு வெல்லம் ஒரு ஆரோக்கியமான மாற்றாக கருதப்படுகிறது. இது பெரும்பாலும் இந்திய வீடுகளில் உணவுகளை இனிமையாக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் சந்தையில் பல வகையான வெல்லம் இருப்பதால், கலப்படமில்லாத மற்றும் ரசாயனம் இல்லாத வெல்லத்தை எப்படி தேர்வு செய்வது? என்பதில் குழப்பம் ஏற்ப்படும்.
வெல்லத்தை சுத்தம் செய்ய, சோடா மற்றும் சில இரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
வெல்லத்தின் நிறம் அடர் பழுப்பு நிறமாக இருக்க வேண்டும். “வெல்லத்தில் உள்ள வெள்ளை அல்லது மஞ்சள் நிறமானது ரசாயனத்தைக் குறிக்கலாம்.
மேலும், “வெள்ளை அல்லது வெளிர் பழுப்பு வெல்லம் இரசாயனங்கள் மற்றும் செயற்கை நிறங்களைப் பயன்படுத்தி கலப்படம் செய்யப்படலாம். இவற்றில் கால்சியம் கார்பனேட் மற்றும் சோடியம் பைகார்பனேட் ஆகியவை அடங்கும்.
எடையை அதிகரிக்க வெல்லத்தை பதப்படுத்தும் போது கால்சியம் கார்பனேட் சேர்க்கப்படுகிறது, அதே நேரத்தில் சோடியம் பைகார்பனேட் பளபளப்பான தோற்றத்தை கொடுக்க உதவுகிறது.
அதோடு “கரும் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும் வெல்லம், ரசாயனம் இல்லாதது என்றும், எனவே, இது மிகவும் கரிம, ரசாயனம் இல்லாத வெல்லம். ரசாயணம் கலந்த வெள்ளம் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். ஜாக்கிரதை.. இனியாவது சரியான முறையில் தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.