2-3 மணி நேரத்தில் கெட்டித் தயிர் செய்ய ஒரு சுலபமான வழி. ஒரு பாத்திரத்தில் மிதமான சூடுள்ள பாலை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் இரண்டு டீஸ்பூன் தயிரை கலக்குங்கள். இதை அப்படியே ‘ஹாட் பேக்’கில் வைத்து மூடிவிடுங்கள். 2-3 மணி நேரத்தில் அருமையான கெட்டித் தயிர் தயார்.
தயிரில் ஒரு சிறிய துண்டு தேங்காயைப் போட்டு வையுங்கள். தயிர் சீக்கிரமே புளித்துப் போகாமலிருக்கும்.
தயிர்ப்பச்சடி செய்யும்போது அதில் ஓமவல்லி இலையைச் சேர்த்தால் வாசனையாக இருக்கும். சளித் தொல்லையும் குறையும்.
மோர் அருந்தும்போது அதில் கொஞ்சம் சுக்குப் பொடி கலந்தால் நல்லது.
தயிர் செய்ய வேண்டும். ஆனால் பாலில் போட தயிரோ, மோரோ இல்லையென்றால் மிளகாய் வற்றலை உடைத்து பாலில் போடவும். அடுத்த நாள் தயிர் ரெடி.
தயிர் வடை செய்யும் போது வடையை பொரித்ததும், அதை சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.