139db006131
ஆரோக்கியம் குறிப்புகள்

தினமும் 5 ஆலிவ் சாப்பிடுங்க! சூப்பர் டிப்ஸ்

ஆலிவ் பிஞ்சு நிலையில் பச்சை நிறமும் பழுத்த நிலையில் கருப்பாக இருக்கும். இது உலகில் பரவலாகப் பயிரிடப்படும் பழங்களில் ஒன்றாகும். இது பல வகை உணவுகளில் பயன்படுத்தப்படும் முக்கிய காயாக விளங்குகின்றது.

பல ஊட்டச்சத்துக்கள இதில் பல அடங்கியுள்ளது. குறிப்பாக ஆலிவ்களில் இருக்கும் பாலிபினால்கள் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளன என்கிறது ஆய்வுகள்.

இதனை தினமும் உடலில் சேர்த்து கொள்வதனால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது.

அந்தவகையில் தற்போது ஆலிவ் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.

 

ஆலிவ்களில் இருக்கும் பினோலிக் கலவைகள் பல வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும் தடுப்பதற்கும் சிறப்பாக செயல்படுகின்றன.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தமானது இதயத்துக்கு தீங்கு விளைவிக்க கூடியது. அதிகப்படியான மன அழுத்தம் மாரடைப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் ஆலிவ்களில் இருக்கும் ஆன் டி ஆக்ஸிடண்ட்கள் இதை தடுத்து நிறுத்துகின்றன.

ஆலிவ்களில் இருக்கும் ஒலிக் அமிலம் (மோனோசாச்சுரேட்டர் கொழுப்பு அமிலம்) வீக்கத்தை குறைத்து இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. ஆலிவ்களில் உள்ள மற்றொரு முக்கியமான ஊட்டச்சத்து தாமிரம். இதன் குறைபாடு இதய நோயுடன் தொடர்பு கொண்டது.

ஆலிவ்களில் இருக்கும் மோனோசாச்சுரேட்டர் கொழுப்புகள் வைட்டமின் ஈ மற்றும் பாலிபினால்களுடன் சேர்ந்து வீக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வியாதிகளுக்கு எதிராக போராடுகின்றன.

ஆலிவ்களில் உள்ள ஆன் டி ஆக்ஸிடண்ட் ஹைட்ராக்ஸிடைரோசோல் எலும்பு இழப்பை தடுக்க உதவுகிறது. இது எலும்புகளின் உருவாக்கம் மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆஸ்டியோபொராசிஸ் அறிகுறிகளுக்கு இதுசிறந்த தீர்வாக செயல்படுகிறது.

ஆலிவ்களில் இருக்கும் பினால்கள் வயிற்றில் நீண்ட நேரம் தங்கி குடல் பாக்டீரியாவாக செயல்பட்டு செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ஆலிவ் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது உடற்பயிற்சியின் செயல்திறனை அதிகரிக்கிறது. இறுதியில் ஆரோக்கியமான எடை பராமரிப்புக்கு உதவுகிறது.

ஆலிவ் உட்கொள்வது மூளை உயிரணு இறப்பை தடுக்கவும் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும்.

ஆலிவ் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும். ஆலிவ் உடல் இன்சுலின் உருவாக்கும் மற்றும் வினைபுரியும் விதத்தை மாற்றலாம். மேலும் இது உயர் இரத்த சர்க்கரை அளவுள்ள நோயாளிகளுக்கு உதவும்.

ஆலிவ்களில் இருக்கும் ஒலிக் அமிலம் தோலின் தோற்றத்தை மேலும் அதிகரிக்கிறது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கர்ப்பிணிகள் ஆலிவ் பதிலாக ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம். அதிகப்படியான ஆலிவ் தவிர்க்க வேண்டும்.

Related posts

காலை வெறும் வயிற்றில் சுடுநீர் குடித்தால் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நல்லது இருக்கா..?

nathan

மாமியார்-மருமகள் ஒற்றுமைக்கு…பெண்களே தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

சூப்பர் டிப்ஸ் வொயிட் டீ-ல் நிறைந்துள்ள நன்மைகள்!!

nathan

உங்களுக்கு தெரியுமா இயற்கையான டூத் பேஸ்ட் வீட்டிலேயே செய்யலாம்!

nathan

மாதவிடாய் சுழற்சியின்போது ஏற்படும் வலியை குறைக்க இது உதவுகிறது!…

sangika

உடல் ஆரோக்கியத்தில் மூலிகைகள்…தெரிந்துகொள்ளுங்கள் !

nathan

இந்த தவறுகள் உங்கள் குழந்தைகளை தனிமையில் அழ வைக்கும் என தெரியுமா?

nathan

முதுகு நலமாயிருக்க 10 வழிகள்”…

nathan

வேர்குருவை தடுக்க கூடிய வீட்டு மருத்துவம்

nathan