மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் உடல நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார்
இந்நிலையில், மதுரை ஆதீன மடத்தின் அடுத்த மடாதிபதி என தன்னை தானே அறிவித்துக் கொண்டு, நித்யானந்தா வெளியிட்டுள்ள அறிக்கையால் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிக்கை ஒன்றில் தன்னை மதுரை ஆதீன மடத்தின் 293வது பீடாதிபதியாக அறிவித்திருக்கிறார்.
மதுரை ஆதீன மடத்தின் 292வது பீடாதிபதி அருணகிரிநாதார், சுவாச பிரச்சினை காரணமாக, மதுரை அப்போலோ மருத்துவமனையில் கடந்த 8ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2021ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் நித்யானந்தா இளைய பீடாதிபதியாக அறிவிக்கப்பட்ட போது, கடும் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிவிப்பு திரும்பபெறப்பட்டது.
இதனையடுத்து, வாபஸ் பெறப்பட்ட உத்தரவை எதிர்த்து போடப்பட்ட வழக்கில், 2018ம் ஆண்டு வெளியான உத்தரவில், மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய தடை விதிக்கப்பட்டது.
இதன் பின்னர், கைலாசா என்ற தனிநாடு மற்றும் நாணயம் அறிவித்து, அதற்கென்று ஒரு பாஸ்போர்ட்டும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் நித்யானந்தா.
தற்போது, ஆஸ்திரேலியாவின் அருகாமையில் உள்ள தனித் தீவு ஒன்றினை, நித்தியானந்தா சொந்தமாக வாங்கி ‘கைலாசவாக’ மாற்றியிருக்கிறார் என்று பேசப்பட்டு வருகிறது.
கைலாசாவில் குடியேறிய நித்தியானந்தா அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. .