அலங்காரம்அழகு குறிப்புகள்கண்களுக்கு அலங்காரம்கண்கள் பராமரிப்பு

கண்ணழகையே கெடுத்து விடும் கருவளையம்…..

eye

கண்ணுக்கு கீழ் தென்படும் கருவளையம் நமது அழகை கெடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது நம் கண்ணழகையே கெடுத்து விடும்.

இதை நீங்கள் போக்க வேண்டும் என்றால் பேக்கிங் சோடா முறையைப் பின்பற்றலாம். கருவளையத்தை போக்க நிறைய முறைகள் இருந்தாலும் இந்த முறை எளிமையான பலனளிக்க கூடிய முறையாகும்.

eye

காரணங்கள் பரம்பரை ரீதியாக, போதுமான தூக்கம் இல்லாமல் இருத்தல், ஊட்டச்சத்துமின்மை பற்ற பிரச்சினைகள் கருவளையத்தை ஏற்படுத்துகிறது. கண்களுக்கு போதுமான ஓய்வு கொடுக்காமல் இருப்பதும் இந்த பிரச்சினையை ஏற்படுத்தும். இந்த நவீன காலத்தில் மக்கள் எலக்ட்ரானிக் பொருட்களான கம்பியூட்டர், டேப் மற்றும் ஸ்மார்ட் போன் முன்பாக இருந்து ஓயாமல் பார்த்துக் கொண்டு இருப்பது கூட கருவளையம் உண்டாக காரணம் ஆகிறது. அதிகப்படியான சூரிய ஒளி கண்களில் படுவதால் கண்கள் வறட்சி அடைந்து கருவளையத்தை உண்டாக்குகிறது. எனவே வெளியே செல்லும் போது கூலிங் கிளாஸ் அணிந்து செல்வது நல்லது. எனவே இந்த கருவளையத்தை எளிய முறையில் போக்க பேக்கிங் சோடா பயன்படும்.

பேக்கிங் சோடா பேக்கிங் சோடா ஒரு இயற்கையான ஸ்க்ரப் ஆகும். இது நமது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சருமத்தில் ஏற்பட்டுள்ள கருப்பை போக்குகிறது. இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

பேக்கிங் சோடா முறை ஒரு சிறிய பெளலில் 1 டீ ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் சிறுதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.நீர்ம பதத்துடன் இருக்கும் இந்த பேஸ்ட்டை கண்களுக்கு கீழே அப்ளே செய்து கொள்ளுங்கள். இதனுடன் சுகர் சேர்த்தால் நன்றாக கரைத்து கொள்ளுங்கள். இப்பொழுது ஸ்பூனின் அடிப்பக்கத்தை திருப்பி பேக்கிங் சோடா வை எடுத்து கண்களுக்கு கீழே அப்ளே செய்யுங்கள். இதை அப்படியே 15 நிமிடங்கள் வைத்து இருந்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். பிறகு மாய்ஸ்சரைசர் தடவிக் கொள்ளுங்கள்.

பேக்கிங் சோடா மற்றும் வெதுவெதுப்பான நீர் 1 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 கப் வெதுவெதுப்பான நீரை கலந்து கொள்ளவும். அதிக சூடு இருக்க வேண்டாம். அது உங்கள் சருமத்தை பாதிப்படைய செய்து விடும். இந்த கலவையில் இரண்டு காட்டன் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு சாதாரண நீரைக் கொண்டு கழுவவும். நன்றாக உலர வைத்து மாய்ஸ்சரைசர் தடவிக் கொள்ளுங்கள். இதை தினசரி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேக்கிங் சோடா மற்றும் க்ரீன் டீ க்ரீன் டீ கண்களுக்கு கீழே உள்ள கருவளையத்தை போக்க பயன்படுகிறது. க்ரீன் டீயில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் சருமம் வயதாகுதல், சரும நிறமாற்றம் போன்றவற்றை போக்குகிறது. இந்த இரண்டும் கலந்த கலவை நல்ல பலனை கொடுக்கும். பயன்படுத்தும் முறை 1 கப் க்ரீன் டீயை சரியன சூட்டில் எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் 1 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலக்கவும். இரண்டு காட்டன் பஞ்சை நனைத்து கண்களில் வைத்து கொள்ளுங்கள். 15 நிமிடங்கள் அப்படியே விடவும். பிறகு மாய்ஸ்சரைசர் அப்ளே செய்யுங்கள். இது கருவளையத்தை போக்க பயன்படுகிறது.

Related posts

உங்கள் தோலிற்கு ஃபேஷியல் செய்வதால் கிடைக்கும் 10 விதமான் நன்மைகள்

nathan

தோல் வறண்டு போவது ஏன், அதை தவிர்ப்பது எப்படி?

nathan

ஆல்யா மானசா சஞ்சீவ் வீட்டில் விசேஷம்! நீங்களே பாருங்க.!

nathan

ஒரு குறைபாடற்ற தோலுக்கு மஞ்சளினால் ஏற்படும் 7 நன்மைகள்

nathan

பாதங்கள் சுத்த‍மாக இருந்தால்தானே ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்!…

sangika

கருவளையம் போக்கும் கைமருந்து

nathan

கனடாவில் ஸ்பிபி சரணுடன் அரங்கத்தை அதிர விட்ட ஷிவாங்கி!

nathan

அண்ணனின் அடையாள அட்டையை பயன்படுத்தி மாணவியுடன் ஹோட்டலில் தங்கிய மாணவன்!

nathan

வீட்டிலேயே முக அழகை மேருகூட்டலாம் இதை செய்யுங்க தினமும்….

sangika