52440
அழகு குறிப்புகள்

நீங்களே பாருங்க.! மீரா மிதுனை வெளுத்து வாங்கிய எம்.எஸ்.பாஸ்கர்

சோசியல் மீடியாவில் தன்னை பற்றி அனைவரும் பேச வேண்டும் என எப்போதும் சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருபர் மீரா மிதுன்.

சமீபத்தில் பட்டியலின இயக்குனர்கள் குறித்து அவதூறு பேசியும், அவர்கள் மனம் புண் படும் வகையிலும் ஒரு வீடியோவில் பேசி இருந்தார்.

இதற்க்கு அனைத்து தரப்பினர் மத்தியிலும் கண்டனங்கள் குவிந்தது. மேலும் இவரை கைது செய்ய வேண்டும் என, மதுரை, சென்னை போன்ற இடங்களில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில், மீரா மிதுன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தற்போது இவரது ஆணவ பேச்சை வெளுத்து வாங்கியுள்ளார் பிரபல நகைச்சுவை, மற்றும் குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது… “என்னவாயிற்று இந்த பெண்ணுக்கு? உன் போதைக்கு நான் ஊறுகாயா? என்று காமெடியாக கேட்பார்கள்.

ஆனால் மீரா மிதுன் சமீபத்தில் பேசியிருப்பது காமெடியல்ல, வீணாக வம்புக்கு இழுக்கும் விஷமத்தனம்.

சாதிப் பெயரை சொல்லி பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. எவ்வளவோ சாதித்தவர்கள் பலர் அடக்கமாக இருக்கும் போது, இவர் ஏன் இவ்வளவு ஆணவமாக பேசுகிறார்? சாதனைக்கும், அறிவுக்கும், சாதிக்கும் சம்பந்தம் ஏது? பெருமதிப்பிற்குரிய என் தெய்வம் ‘கலைஞானி’ கமலஹாசன் அவர்கள் தன்னை ஒரு படத்திலிருந்து ஒதுக்கித்தள்ளி விட்டார் என்று இவர் கூறியிருப்பதை கேட்டு அழுவதா, சிரிப்பதா? ஈர்க்குச்சியை ஒதுக்கித்தள்ள யானை வேண்டுமா?

என்ன மூடத்தனமான பேச்சு இது? தளபதி விஜய், தம்பி சூர்யா ஆகியோர் பண்பின் சிகரங்கள். அவர்களுக்கு அடுத்து இவரது வசைபாடலில் இன்று கலைஞானி அவர்களா? “குறிப்பிட்ட சாதியினரை திரை உலகை விட்டு துரத்த வேண்டும்” என்று சொல்ல இவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இவரது பேச்சு மனதை புண்படுத்தும் விஷயம் மட்டுமல்ல, மடத்தனம்.

அகங்காரத்தின் உச்சம். மற்றவர்கள் மனதை புண்படுத்தி விளம்பரம் தேடுவது கயமைத்தனம். இத்தகைய பேட்டிகளை யூ ட்யூப் சேனல்கள் புறக்கணித்தாலே இப்படிப்பட்ட வம்புக்காரர்களின் வாயை அடைத்து விடலாம்.

மிகுந்த மனவேதனையோடு வன்மையாக இவரை கண்டிக்கிறேன். இனியாவது இவர் நாவடக்கத்தோடு இருக்க கற்றுக் கொள்ள வேண்டும்” என்று நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

உங்கள் முகம், மாசு மரு இல்லாத பளிங்கு போல் பிரகாசிக்க இதோ சில சிகிச்சை முறைகள்…

nathan

வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீங்கிவிடும்.

nathan

பப்பாளி பேஸ்ட் குளியல்

nathan

அழகுக்காக பயன்படுத்தும் கஸ்தூரி மஞ்சளில், இவ்வளவு மருத்துவ குணங்களா? படியுங்க..

nathan

எந்தவித பக்க விளைவையும் ஏற்படுத்தாத பழங்கள் ஃபேஸ் பேக்!!தெரிஞ்சிக்கங்க…

nathan

இந்தியாவில் 70 வயதில் குழந்தை பெற்றெடுத்த மனைவி! 75 வயது கணவர்

nathan

வெளிவந்த தகவல் ! நடிகை ராதிகா சரத்குமாருக்கு கொரோனா தொற்று….

nathan

தொடையில் உள்ள கருமையைப் போக்க ,beauty tips in tamil

nathan

முகத்தில் உள்ள முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்துமே குணமாக அற்புதமான எளிய தீர்வு….

nathan