25.3 C
Chennai
Thursday, Jan 29, 2026
47
ஆரோக்கிய உணவு

தெரிந்துகொள்வோமா? இரவு நேரத்தில் வாழைப்பழம் சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?

வாழைப்பழம் பலருக்கும் பிடித்த மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவாகும். வாழைப்பழத்தை காலை உணவாக சாப்பிட்டால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.

வாழைப்பழத்தில் ஏரளாமான சத்துக்கள் ஒளிந்திருக்கின்றன. இதில் அதிகளவு கார்போஹைட்ரேட்ஸ் இருக்கிறது.குறிப்பாக பச்சை வாழைப்பழத்தில் அதிகளவு கார்போஹைட்ரேட் இருக்கும்.

இதிலிருக்கும் சர்க்கரை ஃப்ருக்டோஸ் வகையாகத் தான் இருக்கிறது. அதனால் வாழைப்பழம் சாப்பிட்டவுடன் எளிதில் நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுகிறது.அதனால் சோர்வாக உணரும் போது வாழைப்பழம் சாப்பிட்டால் புத்துணர்ச்சி கிடைக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருக்கிறது.

இவை நம் இதயத்திற்கு மிகவும் நல்லது. அதோடு நம்முடைய ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி மாரடைப்பு வராமல் தடுக்கவும் உதவிடுகிறது. வாழைப்பழத்தில் இருக்கக்கூடிய பொட்டாசியம் இதில் முக்கியப்பங்காற்றுகிறது.

இதயம் தொடர்பான பிரச்சனைகள், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனை இருப்பவர்கள் வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

இரவு நேரத்தில் சாப்பிடுவது கெடுதலா?

தூங்க சில நிமிடங்கள் முன்பு வாழைப்பழத்தை சாப்பிடுவது என்பது சரியான முறை அல்ல.

இரவு உணவிற்குப் பின் எந்த பழமும் சாப்பிடுவது நல்லது கிடையாது. அதிலும் குறிப்பாக வாழைப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு உகந்தது இல்லை.

ஏனென்றால், அதில் உள்ள Fructose என்ற சர்க்கரை சத்து கொழுப்பாக மாறி நமது உடலில் நிரந்தரமாக தங்கி விடும். இதன் காரணமாக உடலில் கலோரி அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும்.

வயிறு வலி, அல்லது பசி என்னும் பட்சத்தில் வாழைப்பழத்தை சாப்பிட்டு குறைந்தது அரை மணி நேரமாவது முழித்து இருக்க வேண்டியது கட்டாயம்.

வெறுமனே ஸ்நாக்ஸாக சாப்பிடுவது என்பது உங்கள் உடல் நலனுக்கு தீங்கினையே விளைவித்திடும்.உணவு எடுத்துக் கொள்ள வேண்டிய நேரத்தினையும் தாண்டி நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்தால் உங்களுக்கு அதீத பசி உண்டாகிடும்.

இதனை சரியாக்க நீங்கள் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக காலை உணவாக நீங்கள் இதனை எடுக்கலாம். காலையில் வாழைப்பாம் சாப்பிடுவதால் உங்களது இன்ஸுலின் அளவு அதிகரிக்கும்.

Related posts

உங்களுக்கு தெரியுமா பாகற்காய் கசப்பு இல்லாமல் செய்வது எப்படி.?

nathan

சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம்

nathan

உடல் எடையைக் குறைக்க ட்ரை பண்றீங்களா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

காலே இலை சாப்பிடுங்கள்!

nathan

இரவு தூங்கும் முன் சிறிது செலரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் – தெரிஞ்சிக்கங்க…

nathan

உலகிலேயே பழைய சாதம் தான் ஊட்டச்சத்துமிக்க சிறந்த காலை உணவு – அமெரிக்க ஆய்வில் தகவல்

nathan

உடலில் உள்ள அதிகளவு அமிலத்தை சரிசெய்யும் சில இயற்கை வழிகள்!தெரிஞ்சிக்கங்க…

nathan

தொப்பை வர காரணமே காலையில் செய்யும் இந்த விஷயங்களால் தான் தெரியுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… இத தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டா எலும்புகள் வலிமையாகும் தெரியுமா?

nathan