29.7 C
Chennai
Thursday, Mar 12, 2026
13 1413176093 4 deo men
ஆரோக்கியம் குறிப்புகள்

வியர்வையை தடுக்கலாம்

உடலிலுள்ள அசுத்த நீரும், டாக்சின்களும் வியர்வையாக வெளிப்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே, உடலில் வியர்வை அதிகமாக சுரக்கிறது; துர்நாற்றமும் வீசுகிறது.

இதனால், சிலர் எப்போதுமே வாசனை திரவியங்களை பூசிக்கொள்வது, பவுடர் போட்டுக் கொள்வது போன்ற தவறான வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.

அதிக உடல் எடை கொண்டவர்கள், மது அருந்துவோர், கர்ப்பிணிகள் ஆகியோர் அதிக மன அழுத்தத்தில் இருக்கும் போது, வியர்வை அதிகமாவதுண்டு. ஆனால், சிலருக்கு சாதாரணமாகவே வியர்வை அதிகமாக இருக்கும்.

அதிக வியர்வையை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்:

வினிகர் இரண்டு டீஸ்பூனுடன், ஒரு டீஸ்பூன் ஆப்பிள் பழ கலவையை கலந்து, உணவுக்கு முன் மூன்று வேளைகளிலும் உட்கொண்டு வந்தால், வியர்வை பிரச்னையை முற்றிலுமாக தவிர்க்கலாம்.

நாள்தோறும் ஒரு டம்ளர் தக்காளி பழச்சாறு, அருந்தி வந்தாலும் வியர்வையை கட்டுப்படுத்தலாம்.

பச்சையான உருளைக்கிழங்கு துண்டுகளை சாப்பிடுவதும் ஒரு தீர்வு. சில துண்டுகளை வியர் வை அதிகம் ஏற்படும், கை மற்றும் முகத்தில் பூசுவதாலும், வியர்வை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

சிறிதளவு சூடத்தை, தேங்காய் எண்ணெயில் கரைத்து வியர்வை அதிகரிக்கும் இடங்களில் தடவலாம்.

எலுமிச்சை சாற்றில் உப்பு கலந்து, அந்த கலவையை பயன்படுத்தி கைகளை நன்றாக மசாஜ் செய்து வந்தால், உள்ளங்கைகளில் ஏற்படும் வியர்வையை கட்டுபடுத்தலாம்.

நாள்தோறும் திராட்சை சாப்பிட்டு வந்தாலும், அதிக வியர்வை சுரப்பதை கட்டுப்படுத்தலாம். நாள்தோறும் காலை, மாலை என இரண்டு நேரமும் குளிர்ந்த நீரில் குளிப்பதால், உடல் தூய்மையடைவதுடன், புத்துணர்ச்சி பெறுகிறது.
13 1413176093 4 deo men

Related posts

விண்ணை முட்டும் விஞ்ஞானம் தொட்டுவிட்ட நாம் இன்னும் பேச தயங்கும் தலைப்பு தாம்பத்யம். தாம்பத்திய “இன்பத்தின் உச்சக்கட்டம்”

nathan

உண்மையான காரணம் மாலை நேரத்தில் நகம் வெட்டக்கூடாது..

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மாதவிடாய் உயிரை எடுக்கும் வயிற்று வலியை குறைக்க.!

nathan

உங்கள் உடலில் இரத்த ஓட்டம் மிகவும் மோசமாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் அறிகுறிகள்!!

nathan

தெரிந்துகொள்வோமா? குழந்தையின் கண்களில் மை வைக்கலாமா?

nathan

புகைப்பிடிப்பதால் உடலில் தேங்கும் நிக்கோட்டினை முழுமையாக வெளியேற்றும் அற்புத உணவுகள்!!

nathan

பழங்களை தோலுடன் சாப்பிடுவது உங்களை பலவகை புற்றுநோய்களில் இருந்து காப்பாற்றுமாம்

nathan

ஹெல்த் ஸ்பெஷல்.. நாள்பட்ட சைனஸ் பிரச்சனை மற்றும் மூக்கடைப்பைப் போக்கும் அற்புதமான சில எளிய வழிகள்!

nathan

விழிப்புணர்வு பதிவு.!! மாதவிடாய் நேரத்தில் பருத்தி உறிபஞ்சுகளை உபயோகம் செய்வது நல்லதா?

nathan