உடல் எடையை குறைக்க வேண்டுமென்று டயட்டில் இருப்போர் காலை மற்றும் மாலையில் கேரட்டை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதுடன், உடலில் பல நோய்கள் ஏற்படாமலும் தடுக்க முடியும். குறிப்பாக கண் பார்வை கோளாறு, புற்றுநோய் போன்ற பல நோய்களை தடுக்கலாம்.
மேலும் இந்த கேரட்டைக் கொண்டு பலவாறு ஜூஸ் செய்யலாம். இங்கு அவற்றில் ஒரு ஈஸியான மற்றும் சுவையான ஒரு கேரட் ஜூஸின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!
தேவையான பொருட்கள்:
கேரட் – 4
எலுமிச்சை – 1/2 (சாறு எடுத்துக் கொள்ளவும்)
செய்முறை:
முதலில் கேரட்டை நன்கு நீரில் கழுவி, அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனை வடிகட்டி, பின் அதில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி கலந்து பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.