29.7 C
Chennai
Friday, Jul 17, 2026
பழரச வகைகள்

வெள்ளரிக்காய் வாழைத்தண்டு ஜூஸ்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த வெள்ளரிக்காய் வாழைத்தண்டு ஜூஸை அருந்தலாம். இப்போது இந்த ஜூஸை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

வெள்ளரிக்காய் வாழைத்தண்டு ஜூஸ்
தேவையான பொருட்கள் :

வெள்ளரிக்காய் – 1
வாழைத்தண்டு – 1 துண்டு
உப்பு – சுவைக்கு
மிளகுத்தூள் – 1 சிட்டிகை.
கொத்துமல்லி – சில இலைகள்

செய்முறை :

* வெள்ளரிக்காயை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* வாழைத்தண்டின் நரை எடுத்து விட்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

* நறுக்கிய வெள்ளரிக்காய், வாழைத்தண்டை போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அடித்து வடிகட்டவும்.

* வடிகட்டிய ஜூஸில் உப்பு, மிளகுத்தூள், கொத்துமல்லி இலைகள் சேர்த்து அருந்தவும்.

* வெயில் காலத்தில் இந்த ஜூஸ் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும்.

Related posts

பைனாப்பிள் ஜூஸ்

nathan

அரேபியன் டிலைட்

nathan

கேரட் லஸ்ஸி

nathan

சூப்பரான குளு குளு கிரீன் ஆப்பிள் லஸ்ஸி

nathan

Super tips.. மீண்டும் மீண்டும் குடிக்க தூண்டும் சப்போட்டா மில்க் ஷேக்

nathan

சத்தான ஃப்ரூட் சாட் மசாலா

nathan

க்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக்

nathan

உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்

nathan

சுவையான லிச்சி அன்னாசி ஸ்மூத்தி

nathan