26.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
10castoroil10
ஆரோக்கியம் குறிப்புகள்

உங்களுக்கு தெரியுமா குழந்தைக்கு மசாஜ் செய்ய ஏற்ற சிறப்பான 10 எண்ணெய்கள்!!!

குழந்தைக்கு மசாஜ் அளிப்பது என்பது இந்தியாவில் பரவலாக பின்பற்றப்படும் குழந்தை பராமரிப்பு முறையாகும். குழந்தைக்கு செய்யப்படும் மசாஜ் மூலம் கிடைக்கும் பயன்களைப் பற்றியும், அதனால் குழந்தையின் வளர்ச்சியில் உள்ள தாக்கங்களை பற்றியும், உலகத்தை சுற்றியுள்ள பல மருத்துவர்களும் உடல்நல பராமரிப்பு அளிப்பர்களும் பல்வேறு கருத்துக்களை அளித்துள்ளனர்.

குழந்தைக்கு மசாஜ் செய்யும் முறை முக்கியம் தான் என்றாலும் கூட, மசாஜ் செய்வதற்காக நீங்கள் பயன்படுத்தும் பொருட்களும் முக்கியமே. ஏதோ ஒரு எண்ணெயையோ அல்லது க்ரீமையோ உங்கள் குழந்தையின் சருமத்தில் பயன்படுத்த முடியாது. குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானதாலும் மிகவும் உணர்ச்சிக்கு உள்ளாகிற வகையில் இருப்பதாலும், குழந்தைக்கு மசாஜ் செய்ய நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் மீது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

புதிதாக பிறந்த குழந்தையின் சருமம் காற்றில் அதிக நேரம் வெளிப்படுவதாலும், அதிக உணர்ச்சியுடன் இருப்பதாலும், சீக்கிரத்திலேயே வறட்சியாக தோன்றும். சருமத்தில் இந்த வறட்சி நீடிக்கும் பட்சத்தில் சொறி, சிரங்கு என பல்வேறு சரும நோய்கள் ஏற்படும். அதனால் குழந்தையின் சருமம் ஆரோக்கியத்துடனும் ஈரப்பதத்துடனும் இருக்க நல்ல தரமான எண்ணெய்யை கொண்டு மசாஜ் செய்யுங்கள். சரி தரமான எண்ணெய்யை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் உள்ளதா? கவலை வேண்டாம்! இதோ குழந்தைக்கு மசாஜ் செய்ய முதன்மையான 10 எண்ணெய்களின் பட்டியல் இதோ!

தேங்காய் எண்ணெய்

பெரும்பாலும் பலராலும் பயன்படுத்தகூடிய எண்ணெய் இதுவாக தான் இருக்கும். குழந்தையின் சருமத்திற்கும் இது மிகவும் நல்லதாகும்.மிதமான மற்றும் ஈரப்பதமான தட்ப வெப்ப நிலைகளுக்கு தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தலாம். லேசான எண்ணெய்யான இதனை சருமம் வேகமாக உறிஞ்சிடும். மிகவும் உணர்ச்சியுள்ள சருமத்திற்கும், சொறி, சிரங்கு, ஒவ்வாமை தோல் அழற்சி போன்ற சரும பிரச்சனைகளுக்கும் தேங்காய் எண்ணெய் சிறந்த சிகிச்சையை அளிக்கும். குளித்த பிறகு சிறிதளவு தேங்காய் எண்ணெயை குழந்தைக்கு தடவினால் போதும், ஈரப்பதத்துடன் மிருதுவாக இருக்கும் அதன் சருமம். தேங்காய் எண்ணெயில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள், லாரிக் மற்றும் காப்ரிலிக் அமிலங்கள் உள்ளதால் அது சருமத்திற்கு மிக சிறந்ததாக விளங்கும். இதில் பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் பூஞ்சை எதிர்ப்பி குணங்கள் உள்ளதால் குழந்தையின் சருமத்திற்கு இது சிறந்த தேர்வாகும்.

ஆலிவ் எண்ணெய்

குழந்தைக்கு மசாஜ் செய்வதற்கு பயன்படுத்தும் புகழ் பெற்ற எண்ணெய்களில் ஆலிவ் எண்ணெயும் ஒன்றாகும். குழந்தையின் சருமத்தில் சொறி, சிரங்கு, வெட்டு, மற்றும் இதர அலர்ஜிகள் இல்லாமல் இருந்தால் ஆலிவ் எண்ணெய்யை பயன்படுத்துவது பாதுகாப்பானது. மிகவும் உணர்ச்சியுள்ள சருமம் என்றால், ஆலிவ் எண்ணெய்யை தவிர்ப்பது நல்லது. அதற்கு காரணம் அதிலுள்ள குணங்கள் சருமத்திற்குள் உட்புகும் திறனை மேம்படுத்தும். இதனால் சருமத்தை விட்டு ஈரப்பதம் வேகமாக அகலும். மேலும் வறட்சியை ஏற்படுத்தி பலவித சரும பிரச்சனைகளை உண்டாக்கும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெயால் மசாஜ் செய்வது குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. இதில் வெப்பத்தை உண்டாக்கும் தன்மை உள்ளதால், குளிர் காலத்தில் மட்டுமே கடுகு எண்ணெய்யை உபயோகப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கோடைக்காலத்தில் இதை பயன்படுத்தும் போது சருமத்தில் எரிச்சல் உண்டாகும். குழந்தையின் மீது வெதுவெதுப்பான கடுகு எண்ணெய்யை தடவாதீர்கள்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய் குழந்தையின் மசாஜ் எண்ணெய்களில் ஒன்றாகும். இந்த எண்ணெய்யை குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று நிலவும் குளிர் காலத்தில் பயன்படுத்துவது நல்லதாகும். கனமாக மற்றும் வெப்பமாக இருக்கும் இந்த எண்ணெய்யை கோடைக்காலத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும். கருப்பு எள் விதைகளில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது. இது மிகவும் புகழ் பெற்ற ஆயுர்வேத மசாஜ் எண்ணெய்யாகும்.

பாதாம் எண்ணெய்

பல்வேறு மசாஜ் எண்ணெய்களில் பாதாம் எண்ணெய் சேர்க்கப்பட்டிருப்பதை நாம் காணலாம். இதில் வைட்டமின் ஈ வளமையாக உள்ளது. நறுமணமுள்ள எண்ணெய்யை விட தூய்மையான எண்ணெய்யை பயன்படுத்துவது நல்லது.

சூரியகாந்தி எண்ணெய்

சூரியகாந்தி எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இது சருமத்திற்கும் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பமிலங்கள் சருமத்தை பொழிவடையச் செய்யும். உங்கள் குழந்தைக்கு அதிக உணர்வுள்ள சருமம் இருந்தாலோ அல்லது சுலபமாக சொறி ஏற்படும் சருமமாக இருந்தாலோ இந்த எண்ணெயைத் தவிர்க்கவும்.

சீமைச்சாமந்தி எண்ணெய்

மிகவும் அதிமுக்கிய எண்ணெய் இதுவாகும். அதிக உணர்வை கொண்டுள்ள சருமத்திற்கு இது நல்லதென்பதால், பிறந்த குழந்தைகளுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது. சொறிகள் மற்றும் இதர சரும வெடிப்புகளுக்கு சிகிச்சையளிக்க இந்த எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். குறிப்பாக வலியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகவும் நல்லதாகும். இது அவர்களுக்கு தூக்கத்தை கொடுக்கும்.

டீ ட்ரீ எண்ணெய்

பொதுவாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் எண்ணெய் இது. இயற்கை எண்ணெய்யான இதில் ஆன்டி-செப்டிக் குணங்கள் அதிகமாக உள்ளது. பல்வேறு சரும அலர்ஜிகளை போக்கவும் குழந்தைக்கு இதமான உணர்வை அளிக்கவும் இது உதவும்.

சம்மங்கி எண்ணெய்

குழந்தைக்கு மசாஜ் அளிக்க உதவும் மற்றொரு அதிமுக்கிய எண்ணெய்யாகும் இது. சருமத்தின் மீது இனிமையான தாக்கத்தை ஏற்படுத்துவதால், குளித்த பிறகு பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானதாகும் இந்த எண்ணெய். இயற்கையாகவே மிதமான வாசனையை கொண்டுள்ளது இந்த எண்ணெய். குழந்தையின் மூக்கின் மீதும் இது கடுமையாக நடந்து கொள்ளாது.

விளக்கெண்ணெய்

குழந்தையை குளிப்பாட்டுவதற்கு முன்பு இதனை பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. வறண்ட சருமம், முடி மற்றும் நகங்களுக்கு சிகிச்சை அளிக்க விளக்கெண்ணெய்யை பயன்படுத்தலாம். விளக்கெண்ணெய்யை தடவும் போது குழந்தையின் கண்கள் மற்றும் உதடு பகுதிகளில் பயன்படுத்த வேண்டும்.

குழந்தையுடன் பந்தத்தை வலுப்படுத்த மசாஜ் ஒரு சிறந்த வழியாகும். அதனால் அதனை சரியாக பயன்படுத்த தவறாதீர்கள். தினமும் சில நிமிடங்களுக்கு உங்கள் குழந்தைக்கு மசாஜ் செய்யுங்கள். மற்ற பயன்களை காட்டிலும், குழந்தையின் மீதான உங்களது அன்பு பந்தத்தை இது வலுப்படுத்த உதவும். இது போதாதா, மசாஜ் செய்ய!

குழந்தைக்கு எண்ணெய் மசாஜ் செய்வதால் கிடைக்கும் பயன்கள்

பல வீடுகளில், குறிப்பாக இந்தியாவில், குழந்தைக்கு மசாஜ் செய்வது என்பது பொதுவான வழக்கமே; அதுவும் குழந்தை குளிப்பதற்கு முன்பும் பின்பும். குழந்தைக்கு மசாஜ் செய்வதால் பல்வேறு பயன்கள் அடங்கியுள்ளது. அதில் சில பயன்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவைகள் கீழ்வருமாறு:

– குழந்தையை அமைதிப்படுத்தி, சோர்வடைந்த அதன் மூட்டுக்களிலும் தசைகளிலும் இதமாக இருக்கும்.

– குழந்தையின் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்கும்.

– மசாஜ் செய்வதால் குழந்தையுடன் உடல் ரீதியான நெருக்கம் ஏற்படும். இதனால் உங்களுக்கும், உங்கள் குழந்தைக்குமான பந்தம் அதிகரிக்கும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த வேலைகளை செய்தால் பெண்கள் உடல் எடையை குறைக்கலாம்.!

nathan

தெரிந்துகொள்வோமா? காதுகளை சுத்தம் செய்வது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தனிமையில் வசிப்பவர்களுக்கான டாப் 10 யோசனைகள்!!!

nathan

குழந்தைகளுக்கு மசாஜ் செய்ய தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவது நல்லதா?

nathan

இந்த 5 ராசிக்காரர்கள் எப்படிபட்ட சிந்தனை கொண்டவர்களாக இருப்பார்கள் தெரியுமா?

nathan

எடையைக் குறைக்க கற்றாழையை எப்படி பயன்படுத்தலாம்?

nathan

ஒவ்வொரு மனைவிக்கும் இப்படியொரு கணவர் அமைந்தால்…. தேவதர்ஷினியின் வெற்றிக்கு பின்னால் நிற்கும் ஒரே நபர்

nathan

பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர் குடிக்காதீங்க

nathan

நோய்களை குணப்படுத்தும் தேநீர்கள்…..

sangika